மொபைலாக இருந்தாலும் சரி கணிணியாக இருந்தாலும் சரி நீங்கள் பிரவுசர் உபயோகிக்கும் பொழுது ஏதாவது ஒரு தளத்தில் பாஸ்வேர்ட் உபயோகித்தால் , உங்கள் உபயோகிப்பாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் சேமிக்க சொல்லி அந்த பிரவுசர் கேக்கும். இது க்ரோம், எட்ஜ், பயர்பாக்ஸ் என்று அனைத்து ப்ரவுசர்களிலும் உள்ள வசதி. இது எந்த அளவு உபயோகம் என்றால், ஒன்று நீங்கள் பாஸ்வேர்ட் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு, நீங்கள் பிரவுசரில் ப்ரொபைல் க்ரியேட் செய்து உபயோகித்தால் , அதே பிரவுசரை நீங்கள் மற்ற கருவிகளில் உபயோகிக்கும் பொழுது அதே ப்ரோபைலை உபயோகிக்கும் பொழுது பாஸ்வேர்ட்கள் இங்கே தானாக வந்துவிடும்.