Taking Backup in Signal App

வாட்ஸ் அப் செயலுக்கு மாற்றாக சிக்னல் செயலியை பலரும் உபயோகிக்கின்றோம். வாட்ஸ் அப்பில் எப்படி பேக் அப் எடுப்பது என்று அனைவருக்குமே தெரியும். அதே போல் சிக்னல் செயலியில் பேக் அப் எடுக்க இயலும். இந்த Backup நாம் செயலியை நம் மொபைலில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் நிறுவும் பொழுதோ அல்லது வேறு மொபைலில் இதே செயலியை நிறுவும் பொழுதோ இது உதவும். வாட்ஸ் அப் பேக்கப் எடுப்பதற்கும் இதற்கும் இரண்டு வித்யாசங்கள் உள்ளன.

  1. வாட்ஸ் அப் பேக் அப் ஆட்டோமேட்டிக். ஒரு முறை செட் செய்துவிட்டால் தானாக எடுக்க துவங்கும். ஆனால் க்ளவ்ட் ஸ்டோரேஜில் மட்டுமே சேமிக்க இயலும்.
  2. இதில் தானாக பேக் அப் எடுக்காது. வேண்டும் பொழுது நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து உங்கள் மொபைல் / எஸ் டி கார்ட் ஸ்டோரேஜில் மட்டுமே சேமிக்க இயலும்.

எப்படி Backup எடுப்பது

  1. சிக்னல் செயலியின் முகப்பில் வலது பக்க மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்
  2. பின்பு “Chat” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  3. இப்பொழுது “Chat Backups ” திரை வரும்
  4. இதில் உள்ள “Turn on ” என்ற பட்டனை க்ளிக் செய்யவும்
  5. இப்பொழுது உங்கள் பேக் அப் எங்கே சேமிக்கப்படவேண்டும் என சொல்லவும்
  6. வாட்ஸ் அப் உங்கள் பேக் அப்பை கூகிள் ட்ரைவில் மட்டுமே சேமிக்கும். ஆனால் சிக்னல் செயலியில் உங்கள் Backup உங்கள் மொபைல் ஸ்டோரேஜிலோ அல்லது எஸ் டி கார்ட் உபயோகம் செய்திருந்தால் அந்த கார்டிலோ மட்டுமே சேமிக்கும்.
  7. அடுத்த ஸ்க்ரீனில் உங்கள் பேக்கப் ஸ்டோர் ஆகா வேண்டிய போல்டரை தேர்வு செய்யவும்.
  8. அடுத்து ஸ்க்ரீனில் சில எண்கள் வரும். இது நீங்கள் உங்கள் பேக் அப்பை மீண்டும் சிக்னல் செயலியில் ரீஸ்டோர் செய்யும் பொழுது கேட்கப்படும் ரகசிய எங்கள். எனவே இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கலாம் அல்லது எழுதி வைத்துக்கொள்ளலாம்.

About Author