Tech news August 10

Tech news

ட்விட்டரில் இனி “retweets with comments ” என்பது மாறி “Quotes ” என்று வர போகிறது. இந்த ஒவ்வொரு டீவீட்டுக்கும் கீழே மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.

  1. Retweets
  2. Likes
  3. Quotes

ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மொபைல்களில் ஒரே வாட்ஸப் எண்ணை உபயோகப்படுத்தும் திட்டம் இப்பொழுது சோதனையில் உள்ளது. அநேகமாய் இன்னும் சில மாதங்களில் இது அனைவருக்கும் அப்டேட் கொடுக்கப்படலாம். இதற்குண்டான UI இப்பொழுது பார்வைக்கு கிடைத்துள்ளது.ஆனால் ஒரே பிளாட்பார்மில் மட்டுமே இப்படி உபயோகிக்கமுடியும். ஒரே ஆன்ட்ராய்ட் இன்னொன்று ஐ ஓ எஸ் என்று மாற்றி உபயோப்படுத்தும் வசதி இன்னும் வரவில்லை.

செப்டம்பர் 15க்கு பிறகு wechat மற்றும் tiktok உடன் எந்த பரிவர்த்தனையும் கூடாது என்று போன வாரம் ட்ரம்ப் ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து we chat செயலியின் நிறுவனமான tencent ஹோல்ட்டிங் கம்பெனியின் பங்கு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளிகிழமை சரிவுடன் முடிந்த நிலையில் இன்றும் 4.6% வீழ்ச்சி அடைந்தது.

blogspot.in டொமைன் நேம் இன்னும் கூகிளால் திரும்ப வாங்க இயலவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதமாக இந்தப் பிரச்சனை சென்று கொண்டிருந்தாலும், கூகிள் இன்னும் அதிகாரபூர்வமான எதையும் சொல்லவில்லை.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.