புதிது புதிதாய் வைரஸ்களும் / ஏமாற்று வேலைகளும் நடந்தாலும் மென்பொருள் நிறுவனங்கள் அதற்கு மாற்று கண்டுபிடித்து அதை சரி செய்வதையும் தொடர்ந்து கொண்டே உள்ளனர். அடுத்த க்ரோம் அப்டேட்டில் புதிதாய் வர இருக்கும் ஒரு விஷயம் இந்த Text box alert. பொதுவாய் https என்று வந்தாலோ அல்லது இணையதளத்தின் பெயருக்கு முன்னால் ஒரு பூட்டு இருந்தாலோ அந்த இணையத்தளம் பாதுகாப்பானது என அனைவரும் அறிவோம் .

இன்று SSL சர்டிபிகேட் வாங்குவது மிக எளிது. ஆனால் அந்த சர்டிபிகேட்டை மட்டும் நிறுவினால் போதாது. ஏனென்றால் அந்த சர்டிபிகேட் நிறுவப்பட்டிருந்தால் அந்த தளத்தின் முகப்பில் இது உறுதி செய்யப்படும். ஆனால் தளத்தின் உள்ளே எதோ ஒரு பகுதியில் பாதுகாப்பில்லாத நிரலிகள் உபயோகத்தில் இருக்கலாம். குறிப்பாய் ” Form ” அதாவது நீங்கள் உங்கள் விவரங்களை அளிக்கும் இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் கோட் பாதுகாப்பில்லாத ஒன்றாக இருக்கலாம். அதை சாமானியர்கள் இப்பொழுது கண்டறிவது கடினம். அதற்குத்தான் இந்த Text box alert வசதியை கொண்டு வர இருக்கிறது கூகிள் நிறுவனம். இதற்கு முன் இந்தமாதிரி இடங்களில் பிரவுசரின் அட்ரஸ் பாரில் உள்ள பூட்டு மறைந்துவிடும். ஆனால் ஒவ்வொரு தருணமும் அதை பார்ப்போர் மிகக் குறைவு .
இனி இந்த மாதிரி “mixed content ” அதாவது பாதுகாப்புடைய & பாதுகாப்பில்லாத நிரலிகள் உடைய தளத்தில் நீங்கள் எதாவது form நிரப்ப போனால் “Form is not secure. Auto Fill turned off” என்கிற மெசேஜ் வரும். நீங்கள் அந்த தளத்தை நம்பினால் தொடர்ந்து தேவையான தகவல்களை அளிக்கலாம் இல்லையெனில் அங்கிருந்து வெளியேறி விடலாம். இது கூகிள் க்ரோம் வெளியிட்டுள்ள செய்தி.

