Text predictions in MS word

ஆங்கிலத்தில் படிக்க

நம்மில் பலரும் ஜிமெயில் உபயோகிக்கும் பொழுது கவனித்திருப்போம். நாம் டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது அடுத்த வார்த்தையை ஜிமெயில் நமக்கு காட்டும். வேண்டும் என்றால் அதை உபயோகித்துக்கொள்ளலாம் இல்லையெனில் தவிர்த்து விடலாம். அதே போல் இந்த வசதி வேண்டாம் என்றாலும் தவிர்த்து விடலாம். இது வெகு நாட்களாக ஜிமெயிலில் இருக்கிறது என்றாலும் மைக்ரோசாப்ட்டின் “word ” மென்பொருளிலில்”Text predictions” என்ற இந்த வசதி இருந்ததில்லை.

கடந்த வருடம் தனது பீட்டா சோதனையாளர்களுக்கு இந்த வசதியை அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட். அதை தொடர்ந்து இந்த மாதத்தில் தனது “outlook ” உபயோகிப்பாளர்களுக்கு “Text predictions” வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

எவ்விதம் “Text predictions” உபயோகப்படுத்த முடியும் ?

இந்த வசதியை உபயோகப்படுத்தி நீங்கள் டைப் செய்யும்பொழுது நீங்கள் டைப் செய்யும் வார்த்தைக்கு அடுத்த வார்த்தையை “AI ” தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி உங்கள் மென்பொருள் காட்டும். அந்த வார்த்தையை உபயோகப்படுத்த “TAB ” கீயை உபயோகப்படுத்த வேண்டும். அந்த வார்த்தை வேண்டாம் என்றால் “Esc” கீயை உபயோகப்படுத்தலாம்.

Text predictions” உபயோகப்படுத்துவதன் மூலம், பயனாளர்கள் வேகமாக டைப் செய்ய இயலும். அதிகம் மெயில் , வேர்ட் உபயோகம் செய்பவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

About Author