Twitter Blue

Twitter Blue – Paid Subscription services

இன்று சமூக ஊடகத் தலங்களாக கோலோச்சி வரும் ட்விட்டர் , இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்துமே இலவச சேவை தருபவை. விளம்பரங்கள் போட மட்டுமே கட்டணம் என்றாலும் மற்ற அனைத்து சேவைகளும் இலவசம்தான். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் நவம்பர் மாதம் புதியதாக “Twitter Blue” என்ற புதிய சேவையை துவங்கி உள்ளது. இது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இப்பொழுது உள்ளது. மற்ற நாடுகளில் விரைவில் வரலாம். ஆண்ட்ராய்ட் / ஐ ஓ எஸ் / பிரவுசர் வழி உபயோகம் என மூன்று முறைகளிலும் இந்த சேவையை உபயோகப்படுத்த முடியும் . howtogeek இணையதளத்தின் படி, இந்த கட்டண சேவைக்கு அமெரிக்காவில் $3 என்று நிர்ணயித்துள்ளனர்.

ஆரம்பகட்ட சோதனையாக twitter blue அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த சேவை மூலம் என்ன என்ன வசதிகள் தரப்பட்டுள்ளன என கீழே பார்ப்போம்.

Undo Tweet

வெகு நாட்களாக ட்விட்டர் உபயோகிப்பாளர்கள் கேட்டு வரும் வசதி தாங்கள் போட்ட ட்வீட் எடிட் செய்யும் வசதி. இன்னும் நேரடியாக அந்த வசதியை கொண்டு வராவிடினும், “Undo Tweet ” என்னும் வசதி மூலம், நீங்கள் ட்வீட் போட்டு 30 வினாடிகளுக்குள் அதை கேன்சல் செய்து கொள்ளும் வசதியை கொடுத்துள்ளனர்.

Twitter Blue

Reader Mode

சில உபயோகிப்பாளர்கள் பெரிய ட்வீட் திரேட் ( Thread ) போடும் பொழுது சாதாரணமாகி அடுத்தடுத்து படிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். அதற்கு இந்த “Reader Mode” உதவும். இந்த வசதியை உபயோகிக்கும் பொழுது, வழக்கமாய் இருக்கும் லைக் எண்ணிக்கை, ரீ ட்வீட் வசதி, ப்ரொபைல் படம் போன்றவை வராது. வெறுமே ஒரு பெரிய கட்டுரை போன்று வரும். கீழே உதாரண படம்

Twitter Blue
Reader Mode PC : www.howtogeek.com

Bookmarks Folder

அடுத்த வசதி, சில ட்வீட்களை நீங்கள் சேமித்து வைக்க விரும்பினால், பின்னால் தேவைப்படும் பொழுது உபயோகிக்க உதவும். இலவச ட்விட்டரிலும் இந்த வசதி உண்டு, ஆனால் தனித்தனி போல்டராக ஆரம்பித்து சேமிக்க இயலாது. கட்டண சேவையில் தனித்தனி போல்டராக உருவாக்கி உங்களுக்கேற்றவாறு சேமிக்க இயலும்.

எப்படி இதில் இணைவது ?

உங்கள் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இடது பக்க மெனுவில் ” more ” என்று இருக்கும். அந்த மெனுவில் தான் ” Twitter Blue ” நேற்று காட்டியது. ஆனால் இன்று இல்லை. எதோ ஒரு தொழில் நுட்பக் கோளாறில் முன்னதாகவே அது கட்டப்பட்டுவிட்டது. இப்பொழுது மேலே கூறியுள்ள நாடுகளை தவிர்த்து வேறெங்கும் இந்த வசதி வரவில்லை. இந்த ட்விட்டர் ப்ளூ பற்றி கீழே சில ஸ்க்ரீன் ஷாட் பகிர்ந்துள்ளேன்.

About Author