நேற்று உலக பாஸ்வேர்ட் தினம். இன்று அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் , நாம் அனைவருமே பல்வேறு இடங்களில் பாஸ்வேர்ட் உபயோகம் செய்கிறோம். நாம் எவ்வளவுதான் கடினமாக பாஸ்வேர்டை வைத்தாலும், சில சமயம் பாஸ்வேர்ட் திருடப்பட்டு நம் தகவல்கள் திருடப்படுகின்றன. இதை தவிர்க்க Two-factor authentication என்ற ஒரு முறை உள்ளது.
அதாவது நம்முடைய பாஸ்வேர்ட் மட்டுமல்லாது அதற்கடுத்து மேலும் ஒரு முறை உறுதிப்படுத்தும் முறைக்குத்தான் Two-factor authentication என்று பெயர். இதில் இந்த இரண்டாவது முறை உறுதிப்படுத்த பல்வேறு முறைகள் உள்ளன. எஸ்எம்எஸ் மூலம் ஓடிபி பெற்று அதை வெரிபை செய்வது / அல்லது இதற்கென்று உள்ள மென்பொருள்கள் மூலம் கோட் உருவாக்கி அதை உறுதிப்படுத்துவது என்று பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
இவ்வளவு காலமும் இதை தனிப்பட்ட ஒருவரின் விருப்பமாக இருந்தது. அதாவது, வேண்டுமென்றால் இந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு விஷயங்களை பின்பற்றலாம் இல்லையெனில் விட்டுவிடலாம்.

ஆனால் இதை இப்பொழுது கூகிள் நிறுவனம் மாற்றியுள்ளது. சில உபயோகிப்பாளர்களுக்கு அவர்களாகவே இந்த இரட்டை அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தப்போகிறார்கள். அதனால் திடீரெனெ கூகிள் மீண்டும் உறுதிப்படுத்த சொன்னால் பயப்படவேண்டாம். உங்கள் ஜிமெயில் உடன் இணைத்திருக்கும் மொபைலுக்கு எஸ்எம்எஸ் வரும். அதில் இருக்கும் ஒடிபி என்டர் செய்தால் போதும்.