UI 2.0 Beta update for Realme 7

ஒவ்வொரு நிறுவனமாக தனது மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 11 அப்டேட் கொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் இப்பொழுது ரியல் மீ நிறுவனம் தனது Realme 7 மொபைலுக்கு UI 2.0 Beta அப்டேட்டை தந்துள்ளது. இது ஆன்ட்ராய்ட் 11ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும். எப்பொழுதும் பீட்டா அப்டேட்டில் சில பிழைகள் இருக்கலாம். அவை முழு அப்டேட்டில் சரி செய்யப்படும். எனவே பீட்டா அப்டேட் செய்யவிரும்புவார்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த UI 2.0 Beta அப்டேட் செய்யும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

  1. இது முழுக்க முழுக்க சுய விருப்பத்துடன் இணையும் ப்ரோக்ராம். அனைவருக்கும் பீட்டா அப்டேட் வராது.
  2. முதலில் நீங்கள் உங்கள் மொபைலை அப்டேட் செய்து இந்த வெர்ஷன் உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் RMX2151PU_11.A.83 / RMX2151PU_11.A.87
  3. இதன் பின் கீழே படத்தில் உள்ளவாறு பீட்டா அப்டேட் ப்ரோக்ராமில் இணையலாம். இனிஅந்த பிறகு உங்களுக்கு அப்டேட் நோட்டிபிகேஷன் வரும்வரை காத்திருக்கவும்.
  4. குறைந்தது 60% பேட்டரி சார்ஜ் உள்ளதா என உறுதிசெய்துகொள்ளவும்.
  5. அதே போல் உங்கள் மொபைலில் 5 ஜிபி காலி இடம் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.

Note : Realme தளத்தில் இந்த பீட்டா அப்டேட் பற்றி படித்துவிட்டு பின்பு அப்டேட் செய்யவும். தொழில்நுட்ப விஷயம் அதிகம் தெரியாதவர்கள் இந்த அப்டேட் செய்வதை தவிர்க்கவும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.