அடோப் நிறுவனம் 2020க்கு பிறகு பிளாஷ் பிளேயர்கு எந்தவித அப்டேட்டும் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டதால் இனி பிளாஷ் பிளேயர் வேலை செய்யாது. ஜனவரி 12 ஆம் தேதிக்கு பிறகு முழுவதுமாய் நிறுத்தப்படும். எனவே உங்கள் இணையதளங்களில் பிளாஷ் பிளேயர் உபயோகம் செய்திருந்தால் அதை மாற்றி கொள்ளவும்.
உங்கள் கணிணியில் பிளாஷ் பிளேயர் இருந்தால் அது இனி தேவையில்லை. அதை நீக்கிவிடலாம். லேட்டஸ்ட்டாக விண்டோஸ் அப்டேட் செய்திருந்தால் பிளாஷ் பிளேயர் நீக்கப்பட்டிருக்கலாம். எனவே முதலில் பிளாஷ் பிளேயர் இருக்கிறதா என செக் செய்துகொள்ளுங்கள். அதற்கு இந்த இணையதளம் செல்லவும்.
பிளாஷ் பிளேயர் இருந்தால் அதை அன் இன்ஸ்டால் செய்ய
முதலில் பிளாஷ் அன் இன்ஸ்டாலர் டவுன்லோட் செய்துகொள்ளவும்.
பின் அனைத்து ப்ரவுசர்களையும் க்ளோஸ் செய்து கொண்டு அன் இன்ஸ்டாலரை ரன் செய்யவும். இரண்டே ஸ்டெப் . பின் கணிணியை ரீ ஸ்டார்ட் செய்யவும்.