தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் எச்சரிக்கைகள் தரமுடியும். அதையும் மீறி ஏமாறுவோரை காப்பாற்ற முடியாது. முடிந்தவரை நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக சில பாதுகாப்பு முறைகள்
- கணிணிக்கு கட்டாயம் Anti virus அவசியம். Kaspersky ,AVG போன்று இலவச anti virus மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றை அவசியம் உங்கள் கணிணியில் நிறுவவும். அதே போல் மொபைல்களுக்கும் இவற்றின் இலவச செயலிகள் உள்ளன. அவற்றையும் உபயோகப்படுத்தலாம். நீங்கள் அதிகமான டிஜிட்டல் பேமெண்ட் உபயோகப்படுத்துவோர் என்றால் கண்டிப்பாக எதாவது ஒரு Anti Virus செயலியை இன்ஸ்டால் செய்யவும்.
- உங்களுக்கு எஸ் எம் எஸ் / வாட்ஸ் அப் அல்லது எந்த ஒரு செயலியில் லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்யாதீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் இருந்து வந்தாலும் தேவையென்றால் மட்டுமே க்ளிக் செய்யவும்.
- அதே போல் இதை பேர்களுக்கு பார்வெர்ட் செய்தால் மொபைல் / லேப்டாப் இலவசம் என்ற செய்திகளை நம்ப வேண்டாம். அந்த லிங்கை க்ளிக் செய்தால் உங்கள் மொபைல் / லேப்டாப்பில் உள்ள தகவல்கள் திருடப்படலாம்.
- எந்த ஒரு தளத்தில் உங்கள் வங்கி கணக்குகளை உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் அந்த தளம் பாதுகாப்பானதா என பார்க்கவும் . https இருக்க வேண்டும்.
- அதே போல் உங்கள் பாஸ்வேர்ட்களை அடிக்கடி மாற்றுங்கள்.
- சம்பந்தமே இல்லாமல் உங்களுக்கு OTP வந்தால் அதை டெலீட் செய்யவும்.
- வாட்ஸ் அப் நீங்கள் புதிதாய் வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்யும் பொழுது மட்டுமே otp அனுப்பும். யாரவது அழைத்து OTP கேட்டால் பகிர வேண்டாம்.
- ட்விட்டர் / பேஸ்புக் / இன்ஸ்டாகிராமில் இன்பாக்சில் வெளிநாட்டவர் பெயரில் வந்து வியாபாரத்திற்கு பார்ட்னர்ஷிப் பற்றி பேசினால் தயவுதாட்சண்யம் பார்க்காமல் பிளாக் செய்யவும்.
- உங்களுக்கு வரும் அனைத்து செய்திகளையும் பார்வேர்ட் செய்யவேண்டிய அவசியமில்லை. பொய்யான தகவல்களை பகிர்ந்து இணையத்தை குப்பையாக்க வேண்டாம்.
- எந்த ஒரு செயலியையும் இன்ஸ்டால் செய்யும் முன் , இணையத்தில் அதை பற்றி படிக்கவும். பின் தேவைப்பட்டால் கூகிள் பிளே ஸ்டார் / ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மட்டுமே இன்ஸ்டால் செய்யவும்.