Next three updates for Whatsapp
இன்னும் சில மாதங்களில் இந்த மூன்று அப்டேட்களும் அனைத்து Whatsapp பயனாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிகிறது. இப்பொழுதைக்கு இது பீட்டா அப்டேட்டில் வந்துள்ள அப்டேட்கள். சோதனைகள் முடிந்தவுடன் அனைவருக்கும் ரிலீஸ் செய்யப்படும்.
Enhanced Search in Whatsapp , Password for backup & Auto download
தற்சமயம் நீங்கள் வாட்ஸ் அப்பில் வரும் டெக்ஸ்ட் மெசேஜ்களை தேடி எடுக்க வழி இருக்கிறது. ஆனால் போட்டோவோ ,வீடியோவோ தேடுவது என்பது ஒவ்வொரு மெசேஜாக பார்த்துத்தான் எடுக்க வேண்டும். இதை மாற்றி தேடுபொறியிலேயே ( inside whatsapp) இவற்றையும் தேடும் வசதி,
இப்பொழுது உங்கள் வாட்ஸ் அப் செயலியை மட்டுமே நீங்கள் பாஸ்வெர்ட் மூலம் லாக் செய்ய இயலும். கூகிள் ட்ரைவில் நீங்கள் சேமிக்கும் பேக் அப் தகவல்களையும் இனி பாஸ்வெர்ட் மூலம் காப்பாற்ற முடியும்.
அடுத்த ஆப்ஷன் மிக தேவையான ஒன்று. இப்பொழுது நீங்கள் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை நிறுத்தி வைப்பதன் மூலம் தேவை இல்லாத படங்கள் வீடியோக்கள் டவுன்லோடு ஆவதை தவிர்க்கலாம். இந்த அப்டேட் வந்தபிறகு , நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகமுறை அனுப்பப்படும் வீடியோவோ இல்லை படமோ ஆட்டோ டவுன்லோடு ஆகாது. நீங்கள் வேண்டும் என்றால் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம். ஏற்கனவே பலமுறை அனுப்பட்ட மெசேஜ்களை பார்வேர்ட் செய்வதில் சில தடைகளை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க இயலும் என வாட்ஸப் நிறுவனம் நம்புகிறது.