சமீபத்தில் கூகிள் நிறுவனமும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டன. அதன் நோக்கம் – phising ஈமெயில் மூலம் அதிகம் பாதிக்கப்படும் அலல்து குறிவைக்கப்படும் நபர்கள் யார் என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம். ஐந்து மாத ஈமெயில் டேட்டா வைத்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது.
இதில் வந்த முடிவுகள்
- மொத்த ஈமெயில் தாக்குதலில் 42 % பாதிக்கப்பட்டது அமெரிக்காவில் இருப்பவர்கள்
- இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது ஐரோப்பா. 10% சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதற்கடுத்து ஜப்பான் (5%)
அதே போல் இவர்கள் முக்கியமாய் குறிவைப்பது 50 வயதிற்கு மேற்பட்டோரை. அதிகமாய் நவீன் தொழில்நுட்பம் மற்றும் இந்த phishing பற்றி இந்த வயதில் இருப்போரிடம் அதிகம் விழிப்புணர்வு இல்லை. அதேபோல் ஒரே ஒரு கணிணியில் உங்கள் மெயில் ஐடி உபயோகித்தால் இந்த தாக்குதலில் இருந்து தப்ப வாய்ப்புகள் அதிகம். பல்வேறு கணிணிகளில் உங்கள் ஐடியை உபயோகப்படுத்தும் பொழுது நீங்கள் இந்த phishing தாக்குதலுக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
புதிதாய் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் மெயிலில் இருக்கும் லிங்கை க்ளிக் செய்யாதீர்கள். அதே போல் அறிமுகமில்லாத இணையதளங்களில் பண பரிவர்த்தனை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.
இதை பற்றி மேலும் படிக்க