மைக்ரோசாப்ட் நிறுவனம் வழக்கமாய் பழைய பதிப்புகளுக்கு அப்டேட் வழங்குவது மற்றும் சப்போர்ட் தருவதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறுத்திவிடுவது வழக்கம். அதேபோல் இப்பொழுதும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தி. வரும் டிசம்பர் 8,2020க்கு பிறகு Windows 10 version 1903 பதிப்புக்கு எந்தவித பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படமாட்டாது. எனவே இதுவரை அடுத்த பதிப்பான Windows 10 2004க்கு அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அப்டேட் செய்யாவிடில் அடுத்த முறை அப்டேட் செய்ய முயன்றால் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
விண்டோஸ் பதிப்பை எப்படி கண்டுபிடிப்பது ?
உங்கள் கணிணியில் Windows 10 version 1903 ஆ இல்லை Windows 10 version 2004 என்று கண்டுபிடிப்பது மிக எளிது. உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்து windows+R கீ அழுத்தவும். “Run” பாக்சில் “Winver” என்று டைப் செய்தால் உங்கள் கணிணியில் என்ன விண்டோஸ் பதிப்பு இருக்கிறது என காட்டும்.