முன்பு எப்பொழுதையும் விட இப்பொழுது மேற்கத்திய நிறுவனங்களின் சேவையை தவிர்த்து நமக்கேயான சேவைகளை நாம் உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்பொழுது ரஷ்யாவில் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் அவர்கள் அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு ரஷ்யாவில் அவர்களின் சேவைகளை தூண்டிக்கொண்டு வருகின்றன. பேஸ்புக் முதற்கொண்டு மெக்டொனால்ட் போன்ற உணவகங்கள் மட்டுமில்லாது ஜி பே , ஆப்பிள் பே போன்றவையும் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை இந்த நிலை இந்தியாவிற்கு வராது என்பது நிச்சயம் இல்லை. எனவே அந்நிலை வரும் முன் முதலில் நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஜிமெயில் / யாஹூ / ஹாட்மெயில் போன்றவற்றிற்கு எதை மாற்றாக உபயோகப்படுத்தலாம். அப்படி பார்க்கையில் Zoho mail ஒன்றையே இந்தியாவின் “Alternative for Gmail” ஆக பார்க்க முடிகிறது.
முக்கிய காரணங்கள்
- இந்திய ஐபி யில் இருந்து நீங்கள் உருவாக்கும் அனைத்து ஈமெயில் ஐடிகளும் அதன் டேட்டாவும் இந்தியாய் டேட்டா சென்டர்களில் மட்டுமே சேமிக்கப்படுகின்றன.
- மற்ற இலவச ஈமெயில் சேவைகளில் இருப்பது போல் Zoho mail சேவையில் எந்த வித விளம்பரங்களும் வருவது கிடையாது. ஆமாம் இது உண்மை.
- உங்கள் தனிப்பட்ட ஈமெயில் ஐடி ஆகட்டும் அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரில் உருவாக்கும் ( உதா @bhageerathi.co.in) இரண்டுமே இலவசமாக செய்யலாம்.
- சிறிய நிறுவனங்களுக்கு இது கண்டிப்பாக உதவும். ஜிமெயிலில் நீங்கள் உங்கள் நிறுவனத்தின் 5 ஊழியர்களுக்கு மெயில் ஐடி உருவாக்கினால் மாதம் ரூ 625 வீதம் வருடத்திற்கு ரூ 7500 செலவிட வேண்டி வரும். ஆனால் இதுவே zoho மெயில் சேவையில் ஐந்து உபயோகிப்பாளர்கள் வரை நீங்கள் இலவச சேவையாகவே பெறலாம்
- கட்டண சேவையோ இல்லை இலவச சேவையோ நீங்கள் அவர்கள் மொபைல் செயலியும் உண்டு. அதையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
- ஒரே ஒரு தடை உண்டு. இலவச சேவை என்றால், நீங்கள் அவுட்லுக் போன்ற மெயில் க்ளையண்ட்களில் zoho மெயில் உபயோகப்படுத்த இயலாது.
ஏற்கனவே ஒருமுறை zoho மெயில் பற்றி எழுதியதின் லிங்க் இது.
zoho தளத்தில் மெயில் ஐடி உருவாக்க விரும்பினால் லிங்க் இது
Good info. Will be useful LK. Thanks for continuously sharing good information.
Thanks venkat
Good info. Will be useful LK. Thanks for continuously sharing good information.