கலா சேகர் கவிதைகள்

அன்னை…

சுவையுணர்த்தி
(அறுசுவை உணர்த்தி)
பண்பின் (நற்பண்பின்)பயனுரைத்து
அன்பில் (அளப்பரிய)நமை அமிழ்த்தி
தந்தை இவர்தானென்று
தகைமையுடன் உரைத்து
சுற்றமும் நட்பும் காட்டி
ஆதவன் உள்ளளவும்
நம் நலன் மட்டுமே நாடும்
அன்னையே நம் முதல் தெய்வம்
அவள் பாதம் பணிந்திடுவோம்.


அனுபவம்

விழைதல் முதல் நிலையாகி
முயற்சி தொடர் விளைவாகி
அடைதல் கடை நிறைவாகி
பெறுதல் முது நிலையாகும்
அதுவே நல் அனுபவமாம் !