பகாசுரன்

பகாசுரன்

பாண்டவர்கள் தலைமறைவாய் இருந்த காலத்தில் ஏகசக்ர நகரத்தில் வசித்து வந்தனர். அங்கே ஒரு பிராமணரின் வீட்டில் பிராமணர்களாக வேடமிட்டு தினமும் நகரத்தில் பிக்ஷை பெற்று வாழ்ந்தனர்.

ஒரு நாள், சகோதரர் நால்வரும் பிக்ஷை பெற சென்றுவிட குந்தியும் பீமனும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்பொழுது வீட்டின் மறுபுறத்தில் இருந்து எதோ சப்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தது.

அந்த வீட்டின் உரிமையாளரான பிராமணர் தன் மனைவியிடம் ” பிரியமானவளே ! நீ சொல்லியவாறு நீ சென்றுவிட்டால் நான் என்ன செய்வேன் ? நம் சிறு குழந்தைகள் என்ன செய்யும் ? விலை மதிப்பில்லா நம் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் மேலும் நம் சிறுவனை வம்சம் வளர்வதற்காய் காப்பாற்றியாக வேண்டும் ” என கண்ணீருக்கு இடையேக் கூறினார்”.

அதற்கு அவர் மனைவி ” என் கணவரே ! நான் சென்றாக வேண்டும் . உங்களை அனுப்ப இயலாது. கணவன் இல்லாமல் ஒரு பெண்ணால் எப்படி தன் குழந்தைகளை காப்பாற்ற இயலும் ? இந்த அபலை குழந்தைகள் தகப்பனை இழந்து விடுவார்கள். எனக்கு இறப்பை குறித்து எந்த பயமும் இல்லை. நான் சிறந்த வாழ்வை வாழ்ந்து விட்டேன் . நான் சென்றவுடன் நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு நம் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள் ” என கூறினாள்.

இவர்கள் பேசுவதை கேட்ட அவர்களின் மகள் ” நான் சிறு பெண்ணாய் இருந்தாலும், நான் சொல்வதையும் கேளுங்கள். நீங்கள் சென்றுவிட்டால் , நானும் என் தம்பியும் என்ன செய்ய இயலும் ? உங்களுக்கு பதில் நான் சென்றால், உங்களின் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும் ” என சொன்னாள். இதைக் கேட்டவுடன் பெற்றோர் இருவரும் கண்ணீருடன் தங்கள் மகளை அணைத்துக் கொண்டனர்.