ஆபத்பாண்டவன்

ரகு
என்ன தம்பி கோபால்
அப்பா காலையில் கீழ விழுந்துட்டார்
மருத்துவ மனையில் சேர்த்துத்தேன்
என் கொழுந்தியா கல்யாணம் போகணும் நீங்க வரமுடியுமா

சான்ஸ் இல்ல கம்பணி க்கு பாரின் டெலீகட்ஸ் வரா நான் தான் அவர்களை புது பிராஜாக்ட் தொடங்க அதை பற்றி
அவர்களை கூட்டி போய் விளக்கம் கொடூத்து பண்டு வாங்கணும்
அப்போ ராஜுவை வர சொல்
அவன் கம்பெனி விஷயமா அமெரிக்கா போய் இருக்கான்

வேலு நான் கோபால் பேசறேன்
எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா
சொல்லுங்க பாஸ்
அப்பா கீழ விழுந்துட்டார் கங்கா மருத்துவ மனையில் சேர்த்து இருக்கேன்
திங்கள்கிழமை என் கொழுந்தியா கல்யாணம்
நீ வந்து ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் இருக்கு முடியுமா
இப்ப வே கிளம்பி வரேன்
வேலு இதில் இருபதாயிரம் ரூபாய் இருக்கு மருத்துவ மனையில் பணம் கட்ட சொன்ன நான் ஊரில் இல்லை என்று சொல்
ரொம்ப வற்புறுத்தினால் ஐய்யாயிரம் என் சொந்த பணம் இருக்கு என்று பஞ்ச பாட்டு பாடி கட்டு இரண்டு நாளில் வந்து விடுகிறேன்
மெதுவா எல்லாம் முடிந்து மாப்பிள்ளை மருவிருந்து முடிந்து வா
நான் இருக்கேன்
வேல் இருக்க பயம் எதற்கு

வேலு ஊரில் யாவருக்கும் உதவும்
ஆபத்பாண்டவன்
கல்யாணம் என்றால் முகூர்த்தகால் நடுவதில் இருந்து கட்டு சாதம் வரை கட்டி மாப்பிள்ளை விட்டாரை ஆனுப்பிவிட்டு மண்டபம் காலி பண்ணும் பொழுது மீதி உள்ளவற்றறை கல்யாண பண்ணுபவர் வீட்டில் சேர்க்கும் வரை உடன் இருப்பான் மூன்று நாள் சாப்பாடு கழிந்தது என்று சமையலுக்கு விடை கொடுப்பான்
பெரியவா யாரேனும் ஊருக்கு போகணுமா கூட போய் பேக் களை தூக்கி கொண்டு பெரியவர் சிரமத்தை குறைபான்

சாவு வீடா வேலுக்கு தகவல்ன்கொடுத்திட்டா ஐயர் ஏற்பாடு,
பிரீசர் பாக்ஸ் அமரர் உறுதி இறுதி காரியத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கூடவே இடு காடு வரைசென்று உதவும் நல்ல உள்ளம்
கல்யாணம் இல்லை பெண் சுகம் இல்லை

ஊருக்கு உழைத்தே கிழவன் ஆகி விட்டான்
பத்து வயதுக்கு ஊருக்குள்ள வந்தவன்
ஐ ம்பது ஆண்டு சேவை

திருநங்கை குமுதா விடம் தனக்கு கிடைக்கும் காசை கொடுத்து சேமித்து வைப்பான்
எனக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் ஆஸ்பத்திரி யில் சேரு என்று

வெட்டியான் வீரப்பன் இடம் நான் செத்தா நீதான் கொள்ளி vaikanum
ஒரு திருட்டு கேசில் அப்பாவி வேலுவை கோர்த்து விட்டார்கள் திருடர்கள்

அதுவே அவனுக்கு எமனாக மாறி
காவல் நிலையத்தில் ஜயிலில் போட ஊரில் யாரும் ஏன் என்று எட்டி பார்க்கவில்லை குமுதாவும் வீரப்பனும
அவனை ஜாமின் எடுக்க முயற்சி செய்து பிரயோஜனம் இல்லை

காவல் நிலைய பேபி அடியை தாங்க முடியாமல் இறக்க
ரத்த வாந்தி எடுத்து இறந்தான்
என கேசன்முடிக்க

ஊருக்கே உதவிய ஆபத் பாண்டவன் சாவுக்கு இடுகாட்டுக்கு ஊரில் யாரும்வரவில்லை
குமுதா வீரப்பனை தவிர
ஊர் சாவுக்கு இடு காடு வரை சென்று உதவிய நல்ல உள்ளதுக்கு உதவி பெற்ற எந்த மனிதரும் முகத்தை பார்க்க கூட வரவில்லை
இது தான் கலி கால தர்மம்

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.