மருமகள்

கடுகை மலையாக்கும் கலை ஓர் மிகைமை
நெருப்பை குளிராக்கும் கலை ஓர் தகைமை
முதலது கூடாதது மற்றது வேண்டுவது
கூடாதது குடியிருக்கும் பெண்டிர் பலருண்டு
வேண்டுவது தேடி அல்லுறும் ஆடவரும் உண்டு

மிகைமையா ? தகைமையா ?
என்ற
கிடுக்கிப்பிடியதனில்
தளுக்காக வளயவரும் ஆண்களும் சிலருண்டு!
முன்னவள் மருமகள்
பின்னவள் தாய்!
ஆம்.
முன் அவள் மருமகள் பின் அவள் தாய் !
மருமகளும் என் மகளே என
நினைப்பாரும் யாரும் இல்லை
நினைப்பாரென்று எண்ணியே இலவு
காத்த கிளி போல
ஏங்கியே இளைத்த
பெண்கள் பலருண்டு
விஞ்ஞானம் வளர்ந்த பின்பும்
மெய்ஞானம் உணராத
விந்தை உலகமடா
தொடரும் கதையிதடா !.

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.