அம்மாவின் ஆதங்கம் தான்
முடிவில்லாதது. பெண்ணுக்கு
கல்யாணம் ஆகாத வரை
கல்யாணம் ஆகவில்லை என்கிற ஆதங்கம்.
பின் குழந்தை பிறக்கவில்லை
என்கிற ஆதங்கம். பெண் குழந்தை
பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்கிற ஆதங்கம்.
ஆணாக பிறந்தால் நன்றாக படித்து
அவனுக்கு வேலை கிடைக்குமோ?
கிடைக்காதோ என்று ஆதங்கம்.
பெண் குழந்தை ஆனால் மீண்டும்,படிப்பு, திருமணம் , போன்றவைக்கான ஆதங்கம்.
ஆதங்கம் என்பது ஒரு
தொடர் சுழற்சி.