ஏப்ரல் 7 2022 தின ராசி பலன்கள்

டிசம்பர் 18 மார்கழி 03 ராசி பலன்

டிசம்பர் 18 மார்கழி 03 ராசி பலன்

🗓️18-12-2021⏳
🔵சனிக்கிழமை❄️

🕉️மேஷம்
டிசம்பர் 18, 2021

பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : முயற்சிகள் கைகூடும்.
கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 18, 2021

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மேம்படும். எடுத்த பணிகளை முடிப்பதற்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : மதிப்பு மேம்படும்.
ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 18, 2021

வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் போட்டிகள் குறையும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சில பணிகளை முடிப்பதில் அலைச்சல் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.
திருவாதிரை : போட்டிகள் குறையும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️கடகம்
டிசம்பர் 18, 2021

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : பயணங்கள் சாதகமாகும்.
பூசம் : லாபகரமான நாள்.
ஆயில்யம் : மகிழ்ச்சி உண்டாகும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 18, 2021

வீட்டில் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளின் வழியில் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான எண்ணங்களில் புரிதல் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : புரிதல் ஏற்படும்.


🕉️கன்னி
டிசம்பர் 18, 2021

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : லாபம் மேம்படும்.
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


🕉️துலாம்
டிசம்பர் 18, 2021

குடும்பத்தில் சிறு சஞ்சலங்களும், வாக்குவாதங்களும் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் கவனம் வேண்டும். வாழ்க்கைத்துணைவரிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நிதிநெருக்கடி உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : நெருக்கடி உண்டாகும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 18, 2021

நெருக்கமானவர்களிடத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாக அமையும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். மற்றவர்களின்
செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அனுகூலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : நெருக்கம் ஏற்படும்.


🕉️தனுசு
டிசம்பர் 18, 2021

உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனைகளில் வேகமின்றி நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : நெருக்கடிகள் குறையும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.


🕉️மகரம்
டிசம்பர் 18, 2021

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : லாபம் மேம்படும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️கும்பம்
டிசம்பர் 18, 2021

சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். உயர்வான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : மந்தத்தன்மை குறையும்.
பூரட்டாதி : அனுகூலமான நாள்.


🕉️மீனம்
டிசம்பர் 18, 2021

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய நபர்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கனிவு வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். சிலருக்கு நிலபுலன் சேர்க்கை சார்ந்த முயற்சிகள் மேம்படும். வெற்றிகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

பூரட்டாதி : கனிவு வேண்டும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : முயற்சிகள் மேம்படும்.

திருவெம்பாவை படிக்க

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.