நவம்பர் 17 கார்த்திகை 01 ராசி பலன்

நவம்பர் 17 கார்த்திகை 01 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

பதிவுகளை உடனுக்குடன் பெற

🕉️மேஷம்
நவம்பர் 17, 2021

விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் அமைதியின்மை ஏற்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதுமையான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

அஸ்வினி : பிடிவாதம் அதிகரிக்கும்.
பரணி : நெருக்கடிகள் உண்டாகும்.
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️ரிஷபம்
நவம்பர் 17, 2021

புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புரிதல் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : பொறுப்புகள் குறையும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.


🕉️மிதுனம்
நவம்பர் 17, 2021

உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதை உறுத்திக் கொண்டிருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : இடமாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : விருப்பங்கள் நிறைவேறும்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.


🕉️கடகம்
நவம்பர் 17, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு பயணங்கள் சென்று வருவதற்கான தருணங்கள் உண்டாகும். மனதில் ஒருவிதமான தன்னம்பிக்கையும், எதையும் சமாளிக்கும் புத்துணர்ச்சியும் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள்
உண்டாகும். பொறுப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.
ஆயில்யம் : மேன்மையான நாள்.


🕉️சிம்மம்
நவம்பர் 17, 2021

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். நன்மதிப்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.


🕉️கன்னி
நவம்பர் 17, 2021

உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த செயல்கள் நிறைவேற காலதாமதமாகும். பத்திரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.


🕉️துலாம்
நவம்பர் 17, 2021

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபிட்சமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

சித்திரை : முயற்சிகள் அதிகரிக்கும்.
சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் : தடைகள் நீங்கும்.


🕉️விருச்சிகம்
நவம்பர் 17, 2021

உத்தியோகத்தில் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
கேட்டை : புரிதல் மேம்படும்.


🕉️தனுசு
நவம்பர் 17, 2021

உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இழுபறியான பணிகளை செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். நுணுக்கமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


🕉️மகரம்
நவம்பர் 17, 2021

சுபகாரியம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். லாபகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : வரவுகள் மேம்படும்.


🕉️கும்பம்
நவம்பர் 17, 2021

புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கான ஆதாயமும், அறிமுகமும் கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


🕉️மீனம்
நவம்பர் 17, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியவர்களிடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.