பத்ரிநாத் மற்றும் மனா – என் பயணத்தில்

பத்ரிநாத் டைரீஸ்

2018 தீபாவளி விடுமுறையின் பொது பத்ரிநாத் சென்ற அனுபவம்.

குளிர், பனி, ஸ்னோஃபால் என்றவுடன் நினைவுக்கு வருவது சென்ற வருடம் பத்ரிநாத் சென்றது.மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் பத்ரிநாத் அடைந்தேன். நல்ல குளிர், உடலை நன்றாக கவர் செய்திருந்தேன், இருந்தாலும் உடல் நடுங்கியது,கொஞ்ச நேரம் தேவைப்படும் சூழ்நிலையில் ஒத்துப்போக.

நண்பர் மூலம் ஹோட்டலை தேடிச் சென்றேன், கீஸர் வசதி உண்டு என்பதால் இல்லை என்றால் விரகல் சூடு ஆக்கிய தண்ணீர் கிடைக்கும். சில காரணங்களால் ஹோட்டல் மூடிய இருந்தது, விசாரித்ததில் கோவில் மே வரை மூடி விடுவார்கள், அதற்கு முன்பு ஹோட்டல் ற்கு விடுமுறை தந்து கீழ் உத்திரகண்டிற்கு சென்று விட்டார்கள்.

சின்ன ஊர் என்பதால், சிசனும் கிடையாது கீஸர் உள்ள சிறு ஹோட்டல் கிடைத்தது. உடனே சூடான தண்ணீரில் குளிர்த்து, தயாராகி கோவிலுக்கு சென்றேன். கூட்டம் குறைவு, அதிகமாக அந்த மாநில மக்கள், தீபாவளி தினம். அனைவரும் வான வேடிக்கை விட்டு கொண்டாடுனார்கள்.

உள்ளே சாக்ஸ் அணியாமல் சென்றேன், தரை முழுவதும் ஐஸ் இருந்தது, எடுக்கும் முயற்சிகளும் நடைப்பெற்றன இருந்தன, நடக்கவே கடினம், சாக்ஸ் அணிந்து இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். வேகமாக வேலை முடித்துவிட்டு வெளியே வந்தேன். கோவில் அருகில் உள்ள பாலத்தின் அடியில் அலக்நந்தா நதி கம்பீரமாக புகையை வெளியிட்டக்கொண்டே வேகமாக ஓடியது, மொபைலில் வெப்பநிலை 2டிகிரி என்று காண்பித்தது, இயற்கை விசித்திரமானது.

மற்ற இரண்டு கோவில் செல்வது,ஊரை சுற்றி உள்ள மலை முழுவதும் பனி பார்க்க பால் போல இருந்தது.ஐஸ்கட்டியை முதன்முதலாக கையில் எடுத்தேன் , அருகில் உள்ள மனா கிராமத்திற்கு சென்றேன் இந்தியாவின் கடைசி கிராமம். வியாச கணஷ் குகை, சரஸ்வதி நதியின் ஆரம்ப ம் என புதுசான அனுபவம். பழைய வீடுகள் ஆட்கள் குறைவாக இருந்தார்கள். பத்து நாட்கள் பிறகு வந்தால் வெறும் பனியும் இந்திய படை வீரர்கள் மட்டுமே இருப்பார்களாம்.

உணவு வட இந்திய வகைதான், எல்லா மலை ஊர்கள் போல மேகிகள் அதிகமாக இருந்தது. எனது பிடித்தமான உணவு இல்லை, இருந்தும் அந்த தட்ப வெப்ப த்திற்கு காரமாக மனதுக்கு இதமாக இருந்தது.

இரவு வெகு நேரம் ஊர் சுற்றி விட்டு காலையில் தாமதமாக தூங்கி விழிக்க முடிந்தது, காரணம் காலை வேலை மிகவும் குளிர் படுக்கையை விட்டு வெளியே வர முடியவில்லை. உள்ளே இருந்து ஜன்னல் வழியாக பனிப்பொழிவை பார்த்து கொண்டு இருந்தேன். அருகில் உள்ள பனி மலையில் ஏறி முயற்சி செய்து, அதிகமாக மூச்சு வாங்கியதால் மேல் உள்ள கோவிலை அடையவில்லை. வழி வேறு தெரியவில்லை இல்லாம் ஒரே மாதிரியாக எதோ அதிர்ஷ்ட வசமாகப் கீழே வந்துவிட்டேன்.

மறுநாள் காலை 4.30am பஸ், அதை விட்டால் வேறு சர்வீஸ் கிடையாது. கார்கள் கிடைக்கும் ஆனால் இரண்டு மூன்று பஸ் மாற வேண்டும். வரும் போது போதுமான அனுபவங்கள் பெற்று விட்டேன். எப்படியும் பஸ்ஸைப் பிடித்துவிட வேண்டும்.விடியற்காலை எழுந்து, கீஸர் ஆன் செய்து விட்டு, கையில் டூத்பிரஸ்ஸை எடுத்தேன் கைய்யும் பற்களும் தந்தி அடித்தன.சட்டென்று குளித்து விட்டு. ஹோட்டலை வெளியே வந்தேன், தெருவில் நான் மட்டுமே ஊரே உறங்கி இருக்கிறது, pitch dark தெரு விளக்குகள் எரியவில்லை.துரத்தில் நாய் குரைக்கும் சத்தம். பிசாசு மோகினி வருமே எனப்பிரம்மை.எதை பற்றி யோசிக்காமல் கிளம்பும் மனசு இல்லாமல் பேருந்து நிலையம் வந்தேன். அங்கும் யாரும் இல்லை கும் இருட்டு. பஸ் இருக்கிறதா என்ற சந்தேகம், ஓரளவு பஸ் இருப்பது தெரிந்தது. அருகில் நின்று கொண்டு இருந்தேன். என் பெயரை யாரோ அழைத்தார்கள், திரும்பினேன் புது நண்பர் ஒருவர் டென்டில் இருந்தார், ஏற்கனவே அவரிடம் பேசி டீ அருந்தி கொண்டே பேசி கொண்டேன். அதனால் கவலையில்லாமல் பேசினோம் , இந்த பஸ்தான் கிளம்பும் எனவும் தெரிந்தது. சற்று நேரத்தில் பஸ்ஸில் லைட் எரிந்தது, நடத்துனர், பேருந்தனர் இருவரும் வந்துவிட்டார். அவரிடம் விடைபெற்று கொண்டு எனது ஜன்னல் ஓரம் உள்ள இருக்கைக்கு சென்றேன். கூட்டம் இல்லை மொத்தமாக பத்து நபர்கள் சர்தார்ஜிகள், ஆர்மி ஆட்கள் அவர்கள் பேசி கொண்டதில் தெரிந்தது. பஸ் மெதுவாக கிளம்பியது. ஜன்னல் வழியாக பார்த்தால் மறுபக்கம் பெரிய பள்ளத்தாக்கு வலது பக்கம் மலையின் மதில். அலக்நந்தா கூடவே துணையாக வந்தது. வரும் வழியும் பாதியிடம் இருட்டு. குளிரையும் வெளியே நதியையை பார்த்து கொண்டே வந்தேன்.
வித்தியாசமான அனுபவம்.

மனா கிராமம்

சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகில் உள்ள இந்தியாவின் உத்திராரண்ட மாநிலத்தில் உள்ள கடைசி இந்திய கிராமம். மனா பாஸ், இந்தியா திபெத் எல்லையில் உள்ள கிராமம். கணேஷ் குகை, வியாஷ குகை, சரஸ்வதி நதியின் ஆரம்பம். பத்ரிநாத் வரும் மக்களை நம்பியே வாழ்க்கை நடத்தும் மக்கள். சிறு கடையில் போர்ட் அதில் இந்தியாவின் கடைசி தேநீர் மற்றும் மாகி விற்பனைக்கு இருக்கிறது. தீபாவளி பிறகு பனி அதிகம் உள்ளதால் ம
ஊர் மக்கள் ஜோஷி மட் பகுதிக்கு சென்று விடுவார்கள். பிறகு மே பிறகு திரும்பவும் வருவார்கள். காலிஃப்ளவர், முட்டைகோஸ் விவசாயம் நடைபெறும். ஸ்வெட்டர் மற்றும் கைபொருட்கள், தேயிலை முக்கிய வியாபாரம்.

1954 முன் இந்தியா திபெத் இடையே மனா பாஸ் வழியாக போக்குவரத்து , வணிகம் இரு வந்துள்ளது,அதன் பிறகு சீனாவின் தலையிட்டு நுழைவை தடை விதித்தது.

திபெத்திற்கு விடுதலை கிடைத்தால் நிலைமை மாறலாம்.

அடுத்த வருடம் வாய்ப்பு கிடைத்தால் திரும்பவும் செல்ல வேண்டும்.

About Author

One Reply to “பத்ரிநாத் மற்றும் மனா – என் பயணத்தில்”

  1. சிறப்பான கட்டுரை. உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் இரண்டுமே பயணிக்க ஏற்ற இடங்கள்.

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.