இந்த மோசடியை பற்றி அநேகமாய் அனைவருக்குமே தெரிந்திருக்கலாம். இருந்தாலும் தெரியாதவர்களுக்காக இதை எழுதுகிறேன். இந்த “Yono account will be blocked ” குறுந்தகவல் சமீப காலமாய் நீங்கள் எஸ் பி ஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கீர்களோ இல்லையோ ஆனால் உங்களுக்கு வரும். பலரும் குறிப்பாய் கொஞ்சம் வயதானவர்கள் இதை பார்த்து பதற்றமடைய வாய்ப்பு அதிகம். அப்படி பதட்டம் அடைய தேவையில்லை. ஏனென்றால் வங்கியில் இருந்து வரும் எந்த அதிகாரபூர்வ குறுந்தகவலும் தனிப்பட்ட எண்ணிலிருந்து வராது. வங்கியின் பெயர் போட்டுத்தான் வரும். கீழே முதல் ஸ்க்ரீன்ஷாட் பாருங்கள்.
அடுத்து அதில் இருக்கும் லிங்க். இந்த மாதிரி லிங்க் க்ளிக் செய்து அப்டேட் செய்யவும் என்றும் மெசேஜ் வராது. இதில் இருக்கும் ஷார்ட் லிங்க் ( tiny Url ) உங்களை கொண்டு செல்லும் தளத்தை பற்றிய விவரங்களை பாருங்களேன். அழகாய் அந்த தளத்தின் விவரங்களை சொல்லி விடுகிறது. ஒரே ஒரு பக்கம் உருவாக்கி ( yono போன்றே ) அதன் டைட்டிலை மட்டும் எஸ் பி ஐ போன்று வைத்துள்ளனர்.
இப்பொழுது அடுத்த ஸ்க்ரீன் ஷாட்டை பாருங்கள். அதில் அந்த தளத்தின் முகவரியை காட்டியுள்ளேன். எதோ ஒரு இலவச ஹோஸ்டிங்கில் ஒரே ஒரு பக்கம் உருவாக்கி இந்த விளையாட்டை ஆடுகிறார்கள். கிடைத்தவரை லாபம் என்றே ஓடுகிறார்கள். இதில் பலரும் ஏமாற வாய்ப்பிருப்பதால் ஒரு எச்சரிக்கை பதிவுதான் இது. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், தெரியாத சிலருக்கு இதை அனுப்பவும். அதே போல் உங்கள் வாட்ஸ் அப் / டெலிகிராம் வட்டங்களில் பகிரவும்.