பழங்களை உண்ணும் முறை

பழங்களை உண்ணும் முறை

முதலில் பழங்களை எதற்கு சாப்பிட வேண்டும் என்பதற்கு விடை தெரிந்தால், மேலே கேட்ட கேள்விக்கும் விடை தெரிந்து விடும். பழங்களை உண்ணும் முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பழங்களிலுள்ள விட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடன்ஸ்கள் (anti – oxidants) நமக்கு நன்மை தருபவை.பெரும்பாலும் பழங்களில் விட்டமின் சி நிறைந்துள்ளது. விட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை தூண்டவும், inflammation ஐ குறைக்கவும், இரும்புச் சத்தை கிரகிக்க செய்யவும் அவசியம்.

எலுமிச்சை, கொய்யா, சிட்ரஸ் பழங்களான ஆரஞ்ச், திராட்சை போன்றவை விட்டமின் சி நிறைந்தவை. ஆனால், இவற்றையெல்லாம் உணவு உண்ட பின் சாப்பிட கூடாது. பெரிய விருந்தின் முடிவில் ப்ரூட் சால்ட் தருகிறார்கள் இல்லையா, அது தவறானது. கார்போஹைரட் நிறைந்த உணவுகள், விட்டமின் சி கிரகிக்கப்படுவதை தடுக்கும். அதனால், தினமும் லெமன் ரைஸ் சாப்பிட்டாலும் , அதிலுள்ள விட்டமின் சி உடலில் சேராது.

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நல்லது அல்லது உணவு உண்ட 2.30 மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.ஜூஸாக குடிக்காமல் முழு பழமாக சாப்பிடுவது நல்லது. ஜூஸில், பழங்களிலிருக்கும் , ப்ரக்டோஸ் (fructose) எனப்படும் சர்க்கரையே வரும். பழங்களிலுள்ள நார்ச்சத்த்துக்கள், அதை முழுமையாக சாப்பிட்டாலே நம் உடலில் சேரும்.

இனிப்பு சுவை குறைந்த பழங்களே உடலுக்கு நல்லது . பழுக்காத கொய்யா, அவகொடா, லெமன், ஆரஞ்ச், பப்பாளி, அன்னாசி, மாதுளம் பழங்கள் ஒகே. சீசனல் பழங்களான மாம்பழம், தர்பூசணி, பலாப்பழம் போன்றவை இயற்கையை விட அதீத இனிப்புடன், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. அவற்றை 1-2 துண்டுகளுடன் முடித்து கொள்வது உத்தமம்.

சுகர் இருப்பவர்கள் எந்த பழங்களையும் நாடாமல் இருக்க வேண்டும். எனக்கு தெரிந்த ஒருவர், பாலக்காட்டுக் காரர். தினமும் சுகருக்காக இன்சுலின் ஊசி போட்டு கொள்பவர். ஆனாலும், தினமும் வாழைப்பழம் இல்லாவிடில் தூக்கம் வராது என்பார். ‘சக்கப் பழம்’ எப்போது கிடைத்தாலும் ஒரு பிடி பிடிப்பார். காலையில் எழுந்து சுகர் பார்க்கையில், எகிறியிருக்கும். தினமும் ஊசி போட்டும் சுகர் குறைந்தபாடில்லை.

குழந்தைகளுக்கே பழங்கள் ஏற்றவை. கண்ட கண்ட குப்பை உணவுகளை தவிர்த்து, தினமும் பழங்களை உண்ண பழக்கலாம். நாமும் விரத நாட்களில், சாதாரண சமைத்த உணவு சாப்பிடாத நாள்களில் பழங்கள் எடுக்கலாம். அன்னாசியில் , ப்ரொமிலீன் என்ற அற்புதமான என்சைம் உள்ளது. Arthritis ஆல் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து. வலி, வீக்கத்தை குறைக்க வல்லது. Osteoarthritis காக கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கிய மூலப் பொருளாக உள்ளது.

ஆலிவ் பழங்களில் விட்டமின் ஈ உள்ளது. எக்கச்சமான அழகு சாதன பொருள்களில் இருப்பது விட்டமின் ஈ தான். Fertility treatment களில் vitamin E & folate தான் மாத்திரை மாத்திரைகளாக விழுங்க வேண்டும். இதை தவிர, berries அதிகமான நோய்த் தடுப்பு திறன் கொண்டவை. Craneberry பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் urinal infection லிருந்தும், bacterial infection லிருந்தும் காக்குமென சொல்லப்படுகிறது.

இந்த berries ஐயும் raw ஆக சாப்பிட்டால் மட்டுமே பலன். உலர் பழங்களில் இருப்பவை வெறும் சர்க்கரை மாத்திரமே. இதை தவிர்த்து, ‘apple a day, keeps Dr away’ என்பது 150 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரன் அவிழ்த்து விட்ட புரூடா. ஆப்பிளை விட அதிகப்படியான சத்துக்கள் மேலே நாம் பார்த்த பழங்களில் உள்ளன.

யோகாம்பாள் திருநாவுக்கரசு
உணவியல் & ஊட்டச்சத்தியல் ஆலோசகர்
Svastha nutrution

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.