- பாசுரப்படி ராமாயணம் – 1
- பாசுரப்படி ராமாயணம் – 3
- பாசுரப்படி ராமாயணம் – 4
- பாசுரப்படி ராமாயணம் – 6
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக் குணம்திகழ் கொண்டலாய் மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து,
தசரத சக்ரவர்த்தியின் மகனாகப் பிறந்து, மழை தரும் மேகம் போன்று கருமையாகவும், இனிமையாகவும், எல்லோரும் விரும்பு குணத்தவனாகவும் திகழும் ஸ்ரீ ராமன் மாதவனான விஸ்வாமித்ர முனிவனுடைய வேள்வியை காக்க தம்பியோடு காடு நோக்கி நடந்தான்.
கம்பன் இதைச் சொல்லும் போது,
"வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல், என்றும் தேய்வு உறாத் தூணி யாத்து இரு குன்றம் போன்று உயர் தோளில் கொற்றவில் ஒன்று தாங்கினான்; உலகம் தாங்கினான்."

வெற்றியை தரும் வாளினை இடையில் கட்டிக் கொண்டு, உண்மை எப்படி அழியாத் தன்மை பெற்றதோ அதே போன்ற அழியாத் தன்மைப் பெற்ற அம்புகளை, என்றும் தேய்வே இல்லாத அம்புராப் பையில் இட்டு அதை தோளில் மாட்டிக் கொண்டான்.
குன்றம் போன்று உயர்ந்த தோளில் வெற்றி வில்லை வைத்துக் கொண்டான் இந்த உலகை காக்கும் ஸ்ரீ ராமபிரான் – உலகம் தங்கினான்.