மும்பை நினைவுகள் – 7

This entry is part 7 of 9 in the series மும்பை நினைவுகள்

போன பதிவில், திருமணத்திற்கு பிறகு மகாராஷ்டிர பெண்களின் பெயர் மாற்றுவது குறித்து பார்த்தோம். இந்த பதிவில் மகாராஷ்டிரா திருமணங்கள் குறித்து பார்க்கலாம். மஹாராஷ்டிரத் திருமணங்கள் இந்தியா முழுவதும் பரவி இருக்கும் திருமண நடைமுறைகளோடு சில இடங்களில் வேறுபட்டும், சில இடங்களில் ஒன்றுபடும் இருக்கின்றன.

இந்தியா முழுவதும் பெரும்பாலும் மணமகள் சிவப்பு நிற ஆடை அணந்தால், மகாராஷ்டிர மணப்பெண், ஆரஞ்சு அல்லது மாம்பழ நிற புடவை அணிகிறாள். அது ஆறு கஜமாகவோ அல்லது நவ்வாரி எனப்படும் ஒன்பது கஜமாகவோ இருக்கும். திருமணத்திற்கு முதற்கட்டமாக மணமக்களின் ஜாதகங்கள் பொருத்தப்படுகின்றன. மனப்பொருத்தத் திருமணங்களும் வெகுவாக வழக்கிலுள்ளன. இரு குடும்பத்தினருக்கும் தோதான திருமணத்திற்கான நாள் மற்றும் நேரம் முடிவு செய்யப்படுகிறது

இதற்குப் பிறகு, இரு குடும்பத்தினரும் சதத்தம் குலதெய்வ பிரார்த்தனைகள் செய்கின்றனர். நெருங்கின உறவினர்கள் இந்த பூஜைகளில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி யை கேல்வன் என்றழைக்கின்றனர்.

இதற்குப் பிறகு, சாக்கர் பூடா (சர்க்கரை அளித்தல்) என்கிற திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. மணமகன் வீட்டார், மணமகளுக்குப் புடவை மற்றும் இனிப்பு வகைகளையும் பரிசுப் பொருட்களையும் அளிக்கின்றனர். மணமகள் வீட்டாரும் மணமகனுக்கு இனிப்பும் பரிசுகளும் அளிக்கின்றனர். நம் பக்கத்தில் தாம்பூலம் மாற்றிக்கொள்வது போல, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சர்க்கரையை அளித்துக்கொள்கின்றனர்.

திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு முதலில் குல தெய்வத்திற்கும் பிறகு இருவீட்டு பெரியவர்களுக்கும் நேரடியாக சென்று வழங்கப்படுகிறது.

ஹல்தி சடாவ்னா

திருமணத்திற்கு ஓரிரு நாட்கள் முன்பாக, மஞ்சள் குழம்பை மாவிலைகளால் தொட்டு மணமகளின் முகம், கைகள்,கழுத்து மற்றும் கால்கள் போன்ற இடங்களில் பூசுகிறார்கள். அப்போது மணமகள் மற்றும் உறவினர்கள், மஞ்சள் அல்லது பச்சை நிற ஆடை அணிகிறார்கள். மஞ்சள், கிருமி நாசினியாகவும் மணமகளின் முகத்தை பொலிவுறச் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சடங்கு, மணமகனுக்கும் செய்யப்படுகிறது.மஞ்சள் பூசிய பிறகு மணமகனோ மணமகளோ வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது என்பது ஐதீகம்.

மணமகளின் கரங்களிலும், கால்களிலும், மருதாணியால் மிக நுணுக்கமான டிசைன்கள் தீட்டப்படுகின்றன. மணமகனின் பெயரில் உள்ள எழுத்துக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் எழுதப்படுகின்றன. மணமகன் இதை தேடிக் கண்டுபிடிப்பதற்காக இவ்வாறுஎழுதப் படுகின்றன.

நாளை திருமண தினத்தன்று நடைபெரும் சடங்குகளைச் காணலாம்.

Series Navigation<< மும்பை நினைவுகள் – 6மும்பை நினைவுகள் – 8 >>

About Author

2 Replies to “மும்பை நினைவுகள் – 7”

  1. மருதாணியில் மணமகன் பெயர் என்பது புது செய்தி. நம் பக்கம் பட்டுப்பாய், முறுக்குகள் போன்றவற்றில் இருவர் பெயரையும் போடும் வழக்கம் உண்டு.

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.