நாற்பதிலிருந்து ஐம்பது வயதில் இருக்கும் பெரும்பான்மையான பெற்றோர்கள் தாங்கள் ஏதோ பெரிய லட்சிய கனவுகள் கண்டு அதற்கு தங்கள் குடும்ப பொருளாதாரம் ஒத்துழைக்காததால், ஏதோ ஒரு படிப்பை படித்து முன்னுக்கு வந்துவிட்டோம், அதனால எங்க லட்சியத்தெல்லாம் எங்க பசங்கதான் நிறைவேற்றணும் அப்படீன்னு ஒரு mindset ல இருக்காங்க! அந்த parents பண்ற torture லேருந்து பசங்களை கொஞ்சம் தன்னம்பிக்கையோட அவங்க எதிர்கால கனவு என்ன அப்படீன்னு யோசனை பண்ண வைக்க வேண்டிய சூழல் இப்பொழுது!
எந்த அப்பாவாவது பையனை உன்னோட எதிர்கால லட்சியம் என்ன அப்படீன்னு கேட்கறீங்களா? Mumbai ல ஒரு பதினோரு வயது பையன் “Dubbawalas” உதவியுடன் குறைந்தபட்ச நேரத்திலே ஒரு courier service ஆரம்பித்திருக்கிறான். Dubbawalas சூடா சாப்பாடு deliver பண்றாமாதிரி காலையிலே கொடுக்கற courier documents ஐ மாலைக்குள் delivery செய்கிறார்கள். பெரிய logistics company ஆரம்பிக்கவேண்டும் என்ற பையனின் லட்சியத்திற்க்கு அப்பா துணை நிற்கிறார்.
கனவு மெய்ப்பட வேண்டும் – எதிர்கால சமுதாயத்தின் கனவு.
மாத்தி யோசி….
இது மாத்தி யோசிக்க… எதை? மாற்ற யோசிக்க….மாற யோசிக்க..
என்ன விசு பட டயலாக் போல் குழப்பமாக இருக்கிறதா?
இருக்காதே! ஓர் வருடத்திற்க்கும் மேலே. கனவில் கூட நினைத்துப்பார்க்க பயப்படும் ஒரு சூழலில் நாம் வாழ்ந்து இருக்கிறோம்.
9/11, புஜ் பூகம்பம், சுனாமி, கஜா புயல் இப்படி எத்தனையோ அதிர்ச்சிகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், சிலவற்றில் மாட்டிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் அது இல்லாத ஒரு பாதுகாப்பான இடத்திற்க்கு போய்விடலாம் என்று ஒரு option நமக்கு இருந்தது.
ஆனால் கோவிட் அந்த தைரியத்தையெல்லாம் ஆட்டம் காண வைத்துவிட்டது.
ரஞ்சனி காயத்ரி கச்சேரியை பார்த்தசாரதிசுவாமி சபாவில் கேட்டு ரசித்திருப்போம். ஆனால் வருங்காலத்தில் நம்வீட்டு பால்கனியில் யூட்யூபில் கேட்டுரசிக்கும் நிலைதான் என்றால்…அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும்.
ஐயா..! அதெல்லாம் அடுத்த கட்டம். முதலில் டீன் ஏஜ் பிள்ளைகளின் வருங்காலத்தை பற்றி தங்கள் மனங்களில் கனவுகளை சுமந்திருக்கும் பெற்றோர்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்.
எந்த படிப்பிற்க்கு என்ன வேலை கிடைக்கும் என்பதே புரியாத ஒரு சூழல். பிள்ளைகள் தங்கள் வருங்காலத்தை பற்றி என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று கேட்க வேண்டும். எனக்கு சம்பாதித்து போடத்தான் நேரம் இருக்கிறது மற்றதெற்கெல்லாம் இல்லை என்ற சால்ஜாப்பு இனிமேல் வேண்டாம். படிப்பு, பேரண்ட்ஸ் இரண்டுமே ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல். அதனால நேரங்கெட்ட நேரத்துல எழுந்திருப்பேன், இருக்கிறதுலேயே காஸ்ட்லி மொபைல் வேணும், வண்டி வேணும் அப்படீங்கற பிள்ளைகளோட எண்ணங்களை மாத்தி யோசிக்க வைக்கணும்.
“இதுதாண்டா என்னோட சாலரி, போஸ்ட் டாக்ஸ். அடுத்த இரண்டு வருஷத்துக்கு இதுதான். குறைந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல. பட்ஜெட் போட்டு குடும்பத்த நடந்து” அப்படீன்னு உங்க டீனேஜ் பிள்ளையிடமோ, பெண்ணிடமோ தைரியமா வீட்டு பொறுப்பை ஒப்படையுங்க. பெரிய இமயமலையையே இறக்கி வைச்சா மாதிரி உங்க மனசு லேசா இருக்கும். உங்க EMI எல்லாம் உங்க பசங்களுக்கு எப்பதான் தெரியும்?
இன்றைய நிலவரத்துல, இன்னமும் பல வீடுகளில் “work from home” தொடரும் நிலையில், வீட்டில் இருக்கிறவங்க எதிராளி கிட்ட ஏதாவது பேசித்தான் ஆகணும்.
அதனால சீனியர்ஸ் வீட்ல இருக்கிறவங்களோட ஒரு சகஜ நிலைமையை ஏற்படுத்திக்கணும். “என்ன மதிச்சு யார் பேசுவா?” அப்படீங்கற செல்ஃப் பிட்டி வேண்டாம். உங்க பேச்சால் ஒரு சகஜ சூழலை ஏற்படுத்துங்க. உங்க பர்சனல் லைப்லேயோ அல்லது புரோஃபஷனல் லைப்லேயோ நடந்த சவாலான விஷயங்களை எப்படி சந்திச்சீங்க அப்படீன்னு ஜாலியா பேசுங்க. “அட! பாட்டிக்கு இவ்வளவு விஷயம் தெரியுமா”? தாத்தா இவ்வளவு பெரிய போஸ்ட் ல இருந்தாரா? அப்படீன்னு உங்க பேரப்பசங்க ஆச்சரியப்படணும். “அட! அப்பா இவ்வளவு ஃப்ரெண்ட்லியானவரா” அப்படீன்னு உங்க பிள்ளை நெகிழ்ந்து போகணும்.
“இனி வருங்காலம் நமக்கு என்ன அதிர்ச்சிகளை, ஆச்சரியங்களை வைத்திருக்கிறது” என்று தெரியவில்லை.
“ஏன் எப்பொழுதும் நெகடிவ்வாக யோசிக்கிறீர்கள்? பி பாசிடிவ்! இதுவும் கடந்துபோம்” சிலர் கேட்பது காதில் விழுகிறது.
“ஐயா! பாசிடிவ் என்ற வார்த்தையை கேட்டாலே குலை நடுங்குகிறது. இதையும் கடந்து விட்டோம்! ஆனால் வரும் காலம் இதைவிட மோசமாக இருந்தால்…? எந்த சூழ்நிலைக்கும் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள, மாற்றத்தை ஏற்றுக்கொள்ள….தயாராக வேண்டும்”
எனக்கு எல்லாம் எப்பொழுதும் போல் நடக்கும் என்ற மூட நம்பிக்கையிலிருந்து மாற்றம் வேண்டும்.
நான் சொல்வதுதான் சரி என்ற ஈகோவிலிருந்து மாற்றம் வேண்டும்.
சென்ற இரு வருடங்களில் வீடே உலகமாகிப்போனது…உறவுகளை மேம்படுத்த…..இப்பொழுது மாறா விட்டால் வேறு எப்பொழுது?
ஜெயா ரங்கராஜன்
வாழ்வியல் பயிற்சியாளர்.
நல்ல கட்டுரை.