நவம்பர் 12 ஐப்பசி 26 ராசி பலன்

நவம்பர் 12 ஐப்பசி 26 ராசி பலன்

🕉️மேஷம்
நவம்பர் 12, 2021

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : ஒற்றுமை உண்டாகும்.
பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 12, 2021

நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்கவேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். சுறுசுறுப்பான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.


🕉️மிதுனம்
நவம்பர் 12, 2021

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஒற்றுமை மேம்படும்.


🕉️கடகம்
நவம்பர் 12, 2021

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். எந்த செயலையும் நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த செயலகள் காலதாமதமாக நடைபெறும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️சிம்மம்
நவம்பர் 12, 2021

பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.


🕉️கன்னி
நவம்பர் 12, 2021

தனவரவுகள் எதிர்பார்த்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத வரவுகள் சிலருக்கு கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம் : புதுமையான நாள்.
சித்திரை : வரவுகள் மேம்படும்.


🕉️துலாம்
நவம்பர் 12, 2021

உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த தனநெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவேறும். புதிய சிந்தனைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
நவம்பர் 12, 2021

எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதுமை உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : பொறுப்புகள் குறையும்.


🕉️தனுசு
நவம்பர் 12, 2021

பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உலக வாழ்வியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றமும், பேச்சுக்களில் அனுபவமும் வெளிப்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திடீர் மாற்றங்கள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : அனுபவம் வெளிப்படும்.
உத்திராடம் : போட்டிகள் குறையும்.


🕉️மகரம்
நவம்பர் 12, 2021

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இலக்குகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திராடம் : இழிபறிகள் குறையும்.
திருவோணம் : லாபம் கிடைக்கும்.
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.


🕉️கும்பம்
நவம்பர் 12, 2021

நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய வியாபாரம் சம்பந்தமான சிந்தனைகள் மனதில் துளிர்விடும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை வெளிப்படும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : புதிய சிந்தனைகள் தோன்றும்.


🕉️மீனம்
நவம்பர் 12, 2021

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.