Privacy Changes in Whatsapp – Beta ver 2.21.23.14

வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலியை விளம்பரப்படுத்த அதிகம் உபயோகப்படுத்துவது பிரைவசி செட்டிங்ஸ்களையே. அதாவது அதில் அனுப்பும் மெசேஜ் முதற்கொண்டு வேறு யாரும் படிக்க முடியாது என்பதில் துவங்கி அதில் இருக்கும் பல்வேறு பிரைவசி ஆப்ஷன்களையே அது பிரதானமாய் சொல்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு ஆப்ஷன்களுக்கும் தனித்தனி பிரைவசி வசதிகள் உள்ளன. இப்பொழுது உள்ள வசதிப்படி உங்களது ப்ரொபைல் படம், அபௌட் இன்போ , last seen போன்றவற்றிற்கு மூன்று பிரைவசி செட்டிங்ஸ் உள்ளன. அதாவது ” Everyone, My Contacts & No Body” என்று மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று நீங்கள் அனைவரும் பார்க்கும் படி வைக்கலாம் அல்லது யாரும் பார்க்க முடியாதவாறு அல்லது உங்கள் கான்டெக்ட்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும் படி வைக்கலாம். குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்க முடியாதவாறு செட்டிங்ஸ் வைக்க ஆப்ஷன் இல்லை. இதுதான் இப்பொழுதைய புதுசா “Privacy Changes in Whatsapp” மாற்றியுள்ளது.

Privacy Changes in Whatsapp
Privacy Changes in Whatsapp

இப்பொழுதைக்கு இது whatsapp beta 2.21.23.14 பதிப்பில் மட்டுமே வந்துள்ளது. அதிலும் கூட அனைவருக்கும் இந்த அப்டேட் வரவில்லை. சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. எனவே இந்த வசதி உங்களுக்கு வரவில்லை எனில் காத்திருக்கவும். விரைவில் இந்த அப்டேட் வரும். இந்த புதிதாய் ஆப்ஷனை எப்படி உபயோகிப்பது என்பது கீழே

How to enable new Privacy Changes in Whatsapp

உங்கள் வாட்ஸ் அப் செயலியின் முகப்பிலிருந்து வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்

அதில் “Settings” ஆப்ஷனை தேர்வு செய்யவும்

பின்பு “Accounts “ ஆப்ஷனை தேர்வு செய்யவும்

அதன் பின் “Privacy” தேர்வு செய்யவும்

இப்பொழுது “Last seen / Profile Photo / About / Status ” ஆப்ஷன்கள் வரும் . அதில் எதற்கு பிரைவசி ஆப்ஷனை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்

இப்பொழுது புதிதாக “My contacts except…” என்ற ஆப்ஷன் இருக்கும். யாருக்கு உங்கள் அப்டேட் தெரிய வேண்டாமோ அவரை தேர்வு செய்யலாம்.

நீங்கள் யாரிடம் இருந்து “Last seen ” மறைக்கிறீர்களோ அவர்களது “last seen ” நீங்களும் பார்க்க இயலாது.

Privacy Changes in Whatsapp
PC:wabetainfo.com/

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.