24-hour disappearing messages – Whatsapp

சென்ற வருட நவம்பரில் குறிப்பிட்ட மெசேஜ் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு பின் தானாக அழியும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது. ஆனாலும் அந்த காலக்கெடு 7 நாட்களுக்கு குறைவாக வைக்க முடியாமல் இருந்தது. அதற்கும் குறைவான காலக்கெடு கொண்டுவருவதற்கு வாட்ஸ் அப் முயன்று வருகிறது. அது குறித்த தகவல் இப்பொழுது வெளியாகி உள்ளது. அதன் படி 24-hour disappearing messages வசதியை சோதித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் இந்த வசதி எந்த இயங்குதளத்தில் சோதிக்கப்பட்டு வருகிறது எப்பொழுது அனைவரின் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளிவரவில்லை. இந்த செய்தி படி நீங்கள் அனுப்பும் எந்த மெசேஜும் 24 மணி நேரத்தில் அழிவது போல் அமைத்துக் கொள்ளலாம். இப்பொழுது சோதிக்கபப்ட்டு வருவதால் விரைவில் 24-hour disappearing messages வசதி அனைவருக்கும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

How to set disappearing messages

ஆன்ட்ராய்ட் மொபைலில் யாருக்கு இந்த “Disappearing Message : அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களுடனான அரட்டையில் வலது மூலையில் இருக்கும் “view Contact ” க்ளிக் செய்யவும். பின் “Disappearing messages ” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதன் பின் இந்த வசதி வேண்டுமா இல்லை வேண்டாமா என்பதை தேர்வு செய்யவும்.

இந்த வசதி தேர்வு செய்து அனுப்பும் மெசேஜ்கள் ஏழு நாட்களில் அழிந்துவிடும். ஆனால் அதற்கு முன்னால் அந்த மெசேஜ் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டாலோ இல்லை போட்டோ சேமித்து வைக்கப்பட்டாலோ அழியாது. ஒரு முறை இந்த வசதியை “on ” செய்துவிட்டால் மீண்டும் “off ” செய்யும் வரை அனுப்பும் மெசேஜ் அனைத்தும் 7 நாட்களில் அழியும். யாருக்கு இந்த “Disappearing message ” அனுப்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு லேபிளுடன் இந்த மெசேஜ் செல்லும்.

24-hour disappearing messages

About Author