வாட்ஸ் அப் செயலி, பயன்பாட்டிற்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது. 2020ல் பல புதிய வசதிகளை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2021 துவக்கத்தில் 2 முக்கிய செயல்பாடுகள் மற்றும் புதிய பிரைவசி பாலிசியை கொண்டு வரவுள்ளது.
புதிய பிரைவசி பாலிசி
இது பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் ஆகும் எனக் கூறப்படுகிறது. அணைத்து பயனாளர்களுக்கு புதிய பாலிசியை ஏற்றுக் கொள்ளவேண்டும் இல்லையேல் வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்த முடியாத நிலை உருவாகலாம்.புதிய பிரைவசி பாலிசி மற்றும் டேட்டா பாலிசியை பற்றி தகவல்கள் எதுவும் வரவில்லை. இது பொதுவாக அணைத்து மென்பொருட்கள் மற்றும் செயலிகள் கேட்பதுதான். பிப்ரவரி 8 செயலியில் இதை பற்றிய அறிவிப்பு வரலாம்.
வாட்ஸ் அப் வெப் மூலம் வீடியோ / ஆடியோ அழைப்புகள்
வாட்ஸ் அப் செயலியில் உள்ள பல வசதிகள் அதன் வெப் மற்றும் டெஸ்க் டாப் பதிப்பில் இருந்தாலும் வீடியோ / ஆடியோ அழைப்புகள் வசதி இதுவரை இல்லை. ஜனவரியில் இந்த வசதி சிலருக்கு வரலாம் என தெரிகிறது.
ஐஓஎஸ் அப்டேட்
ஐ ஓ எஸ்ஸில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டோ / வீடியோக்களை பேஸ்ட் செய்யும் வசதி இப்பொழுது இதன் ஐஓஎஸ் பீட்டா பதிப்பில் வந்துள்ளது. முதலில் உங்கள் ஐபோனில் இருக்கும் போட்டோ கேலரியில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டோக்களை தேர்வு செய்து “Export / Copy ” ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும். பின் வாட்ஸ் அப் செயலியில் யாருக்கு அனுப்பவேண்டுமோ அந்த சாட் விண்டோ ஓபன் செய்து பேஸ்ட் செய்ய வேண்டும். இது இப்பொழுது பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. மற்றவர்களுக்கு விரைவில் வரும்.