வாட்ஸ் அப் நிறுவனம், அடுத்த ஒரு முக்கிய வசதியாக “WhatsApp Communities” என்ற வசதியை உருவாக்கி வருகிறது. பலருக்கும் இது என்ன என்ற சந்தேகம் வரும். இன்னும் இதை பற்றி தெளிவான விளக்கம் யாருக்கும் கிடைக்கவில்லை. இது ஏற்கனவே இருக்கும் வாட்ஸ் அப் க்ரூப்பிற்கு மாற்றாக இருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் இருந்து வந்தது. இதை பற்றி ஏற்கனவே செய்தி வந்தபொழுதும் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இதுவரை எழுதவில்லை. இந்த வசதி இன்னும் பீட்டா டெஸ்ட் செய்பவர்களுக்கும் வரவில்லை. ஆனால் இப்பொழுது வாட்ஸ் அப் பீட்டா செய்திகளை வெளியிடும் wabetainfo தளம் இதை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.
இது வாட்ஸ் அப் க்ரூப்பிற்கு மாற்றா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதைய நிலையில் இதுதான் உண்மை. ஆனால் இத்து வடிவம் பெறும் பொழுது மாறலாம். இப்பொழுதைய வடிவத்தில் “WhatsApp Communities” என்பது சில க்ரூப்களின் சேர்த்த வடிவம்தான். அதாவது டிகிரி கோர்ஸ் என்பது ஒரு வாட்ஸ் அப் கம்யூனிட்டி என்று வைத்துக்கொண்டால் டீச்சிங் க்ளாஸ்கள் அந்த கம்யூனிட்டியின் க்ரூப்கள். அதாவது ஒரே மாதிரியான வாட்ஸ் அப் க்ரூப்களை இணைத்து ஒரு வாட்ஸ் அப் கம்யூனிட்டி உருவாக்கலாம்.
க்ரூப் போன்றே இதிலும் சாட் செய்யலாம். மற்றவர்களை இணைக்கலாம். கீழே இதன் ஸ்க்ரீன்ஷாட் கொடுத்துள்ளேன். ஒரு சிறிய வித்யாசம் என்னவென்று பார்த்தால் கம்யூனுட்டிக்களின் DP ஐகான் சதுர வடிவில் இருப்பதை பார்க்கலாம். இந்த கம்யூனிட்டிக்கு மட்டும் இந்த செட்டிங்ஸ் செய்வதற்கு பதில் அனைத்து பீட்டா உபயோகிப்பாளருக்கும் இந்த சதுர dp செட்டிங் அப்டேட் ஆனது. ஆனால் பிறகு அதை நீக்கி விட்டனர்.