சில நண்பர்கள் எப்படி கூகிள் / வெர்ட் பிரஸ் வழங்கும் இலவச பிளாக் ( Blog ) சேவையை பயன்படுத்தி எழுதுவது என்று கேட்டிருந்தனர். அவர்களுக்காக இந்த பதிவு. இதை கூகிள் வழங்கும் ப்ளாகர் உபயோகப்படுத்துவதை பற்றி பார்ப்போம். Create free blog பதிவு புதிதாய் பிளாக் எழுத விரும்புவர்களுக்கானது. பேஸ்புக் அல்லது எந்த ஒரு சமூக ஊடகங்களும் உங்கள் ப்ரோபைலை எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கலாம். அப்படி நீக்கும் பட்சத்தில் நீங்கள் எழுதிய பதிவுகளும் போய் விடும். நீங்கள் எழுதுபவை பின்னால் தேவைப்படும் என நினைத்தால் ஒரு பேக் அப் போன்றும் இதை பயன்படுத்தலாம்.
Create free blog
- முதலில் “Blogger.com” என்ற இணைய முகவரிக்கு செல்லவும்
- உங்களுடைய ஜிமெயில் ஐடி உபயோகப்படுத்தி லாகின் செய்யவும்.
- அடுத்து நீங்கள் ப்ளாகரின் டேஸ்போர்டில் இருப்பீர்கள்.
- இடது பக்கம் “New Blog” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- இப்பொழுது உங்கள் பிளாகிற்கான பெயரை டைப் செய்யவும். தமிழ் / ஆங்கிலம் என எது வேண்டுமோ அதை டைப் செய்யவும்.
- அடுத்தது உங்கள் பிளாகின் முகவரி . உதாரணத்திற்கு இந்த தளத்தின் முகவரி tech4india.in என்பது போல் உங்கள் பிளாகிற்கும் தேவை. உங்கள் பிளாகிற்கு tech4india.blogspot.com என்று வரும்.
- இப்பொழுது நீங்கள் உங்கள் முதல் பதிவை பதிவு செய்யலாம்.
- “New Post” என்று இருப்பதை க்ளிக் செய்து முதல் பதிவை டைப் செய்யலாம்.
- முதலில் தலைப்பு , பின் பதிவை போடுங்கள் தேவையான படங்களை சேர்க்கவும். அதன் பின் வலது பக்கம் “preview ” இருக்கும் அதை க்ளிக் செய்து ஏதாவது தவறு இருக்கிறதா என பார்க்கவும். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் “பப்ளிஷ்” பட்டனை க்ளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் பதிவு ரெடி. அதை பேஸ்புக் / வாட்ஸ் அப் / ட்விட்டரில் பகிரலாம்.
கீழே படங்களாக செய்முறை விளக்கம்