பொதுவாய் நாம் அனைவருமே மொபைல் உபயோகப்படுத்தி பழகிவிட்டோம். அதில் நமது மொபைலில் உள்ள இடத்தை நிர்வகிப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. காரணம், என்னென்ன செயலிகள் எவ்வளவு இடம் பிடித்துள்ளன , இதில் தேவை இல்லாத கோப்புகள், படங்கள் என ஆன்ட்ராய்ட் / ஐ ஓ எஸ் நமக்கு பிரித்துக் காட்டிவிடும். ஆனால் விண்டோஸில் சமீபத்திய பதிப்பான 11 மற்றும் விண்டோஸ் 10 பின் சமீபத்திய அப்டேட்கள் செய்த கணிணிகளை தவிர்த்து மற்றவற்றில் இவ்வாறு பிரித்து காண்பிப்பதில்லை. அதிக பட்சம், இன்டர்நெட் டெம்ப் பைல்களை காட்டும். விண்டோஸ் 10இன் சமீபத்திய பதிப்புகளிலும் Manage Storage என்ற ஒரு வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் Managing Storage in Windows 11 பற்றி பார்ப்போம்.
How to access Storage Settings
ஸ்டார்ட் மெனுவில் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது இடது பக்கம் “system” ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இதில் “Storage” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

இதில் எதெது உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் பிரைமரி பார்ட்டீசியனில் எவ்வளவு இடத்தை பிடித்திருக்கிறது எனக் காட்டும். உதாரணத்திற்கு நாம் temporary files தேர்வு செய்தால் , அதில் என்னென்னவிதமான கோப்புகள் இருக்கின்றன என பார்த்து தேவை இல்லாததை டெலிட் செய்யலாம். பொதுவாய் இன்று 1 டிபி அளவு ஹார்ட் டிஸ்க்தான் பெரும்பாலும் பலரும் உபயோகிப்பது. எனவே இடம் தேவை என்ற பிரச்சனை வராது என்றாலும், தேவை இல்ல கோப்புகள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும். இரண்டாவது வேறேதாவது மால்வேர் வர வாய்ப்பு உருவாக்கும்.
இதில் தேவை இல்லாதவற்றை தேர்வு செய்து “Remove Files ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

உறுதி படுத்த சொல்லும்….

பின்பு அவற்றை அழிக்கத் துவங்கும்.

விண்டோஸை பற்றிய மற்றுமொரு பதிவுடன் விரைவில் சந்திப்போம்…