கூகிள் க்ரோம் ப்ரவுசர்தான் அதிக அளவில் நாம் உபயோகிக்கும் பிரவுசர். ஆன்ட்ராய்ட் மொபைல் ஆகட்டும் கணிணி ஆகட்டும் இதுவே பலராலும் உபயோகிக்கப்படுகிறது. மற்ற பிரவுசர்கள் பல இருந்தாலும் அவை இந்த அளவிற்கு விரும்பப்படவில்லை. பொதுவாய் இந்த மாற்று பிரவுசர்கள் உபயோகிப்போர் பெரும்பாலும் தொழில்நுட்ப விஷயங்களில் விருப்பம் உடையவர்களாய் இருப்பார்கள். பெரும்பாலும் நாம் அனைவரும் தெரியாத இணையதளங்களுக்கு செல்வதில்லை. இருந்தாலும் சில சமயம் நமக்கும் தெரியாமல் எதோ ஒரு லிங்கை அழுத்திவிடுவோம். ஒரு வெப்சைட்டை பார்த்தவுடன் அது பாதுகாப்பில்லாத வெப்சைட்டா என நம்மால் சொல்வது கடினம். இதற்குத்தான் பாதுகாப்பு செட்டிங்ஸ் உள்ளன. Google Chrome Security Settings மூன்று விதமான செட்டிங்ஸ் உள்ளது. அதில் நமக்கு எது தேவையோ அதை உபயோகம் செய்யலாம்.
இந்த செட்டிங்ஸ் ( கணிணி / மொபைல் இரண்டிலுமே) எப்படி மாற்றுவது. உங்கள் க்ரோம் பிரவுசரின் வலது மேல் பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகள் ( ஹாம்பர்கர் மெனு ) க்ளிக் செய்யவும். அதன் பின் “Privacy & Security ” ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதன் பின் “Safe Browsing” ஆப்ஷனை தேர்வு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் காட்டும்.



Enhanced Protection
இருப்பதிலேயே அதிகபட்ச பாதுகாப்பு அம்சம் இது. நீங்கள் பிரவுசரில் ஸ்டோர் செய்திருக்கும் பாஸ்வேர்ட் காம்ப்ரமைஸ் ஆகி இருந்தால் அதையும் உங்களுக்கு சொல்லும். அதே போல் நீங்கள் செல்லும் இணையதளங்கள் பாதுகாப்பானவை அல்ல என்றால் உங்களுக்கு வார்னிங் மெசேஜ் வரும். அதே போல் நீங்கள் அடிக்கடி செல்லும் இணையதளங்களின் சில லிங்க் கூகுளுக்கு அனுப்பப்படும். அவர்களின் சோதனைக்காகவும் புதிய பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டறியவும் இது பயன்படும்.

Standard protection
இது அனைவருக்கும் ஓரளவு ஏற்றது. சென்ற ஆப்ஷனில் இருந்த சில விஷயங்கள் இதில் உபயோகிப்போரின் விருப்பத்திற்கு விட்டிருப்பார்கள்.

அடுத்தது “No Protection”. இது யாருக்குமே ஏற்றது அல்ல. உங்களுக்கு எந்த வித பிரவுசர் பாதுகாப்பும் வேண்டாம் என்றால் இதை பயன்படுத்தலாம்.