எல்லா செயலிகளுமே புதிது புதிதாய் வசதிகள் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றன. சில மாதங்கள் புதிதாய் எந்த வசதியும் வராவிடில் தர வரிசையில் அவர்கள் பின்தங்கும் ஒரு காலகட்டத்தில் இருக்கின்றனர். உதாரணத்திற்கு ட்விட்டர் / பேஸ்புக். இவை இரண்டும் சமூக ஊடகங்களில் போட்டியின்றி கோலோச்சிக்கொண்டிருந்தனர். ஆனால் இவர்களை அசைத்து பார்க்க வந்தது குரல் வடிவிலான செயலியான ” Club House “. இப்பொழுது ட்விட்டரில் spaces என்ற வசதி வந்துவிட்டது. பேஸ்புக்கும் ஆடியோ சாட் ரூம்களை சோதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் புகைப்படம் / வீடியோ பகிரும் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமிற்கு அப்படி ஒரு போட்டி இல்லை என சொன்னாலும், டிக் டாக் போன்ற செயலிகள் இன்ஸ்டாக்ராமின் வருமானத்தை பதம் பார்த்தன என்பதுதான் உண்மை. அதன் பின்தான் ரீல்ஸ் போன்ற வசதி வந்தது. இப்பொழுது அதே போன்று ஒரு வசதி. இது வரையில் வீடியோக்களுக்கு மட்டுமே பின்னணி இசை சேர்ப்பு இன்ஸ்டாகிராமில் செய்ய முடிந்தது. இனி நீங்கள் அப்லோட் செய்யும் படங்களுக்கும் பின்னணி இசையை சேர்க்க முடியும். இன்ஸ்டாகிராமில் “Add music to photos” எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
- உங்கள் ஆண்டிராய்டு இன்ஸ்டாகிராம் செயலியில் மேலே இருக்கும் “+” டச் செய்யவும்
- இப்பொழுது “Post” என்பதை தேர்வு செய்யவும்
- எந்த படம் வேண்டுமோ அதை உங்கள் மொபைல் காலரியில் இருந்து தேர்வு செய்யவும். பின் தேவையான பில்டர் தேர்வு செய்யவும்.
- அடுத்த ஸ்க்ரீனில் மூன்றாவதாக ” Add Music ” என்ற ஆப்ஷன் இருக்கும். அதன் கீழே வரிசையாக சில பின்னணி இசை கோர்ப்புகள் இருக்கும். உங்களுக்கு தேவையான இசையை தேர்வு செய்யவும்.
- அடுத்து போட்டோ இசையுடன் அப்லோட் ஆகும்.
கீழே ஸ்க்ரீன் ஷாட் + ஒரு வீடியோ