ஜுலை மாதம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மெசேஜ்களுக்கு எமோஜி ரியாக்ஷன் சேர்ப்பது பற்றி பரிசோதித்துக் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியது. அதை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தோம். இப்பொழுது இந்த ” Add reactions to Whatsapp Status” வசதி வாட்ஸ் அப் பீட்டா செயலி உபயோகிப்பாளர்களில் சிலருக்கு வந்துள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Add reactions to Whatsapp Status
சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு வரும் தனிப்பட்ட அல்லது க்ரூப் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ஷன் சேர்க்கும் வசதி அனைவருக்கும் வந்தது. அதைத் தொடர்ந்து ஸ்டேட்டஸ் மெசேஜ்களுக்கும் இந்த வசதி வரப்போவதாக செய்தி வந்தது. இப்பொழுது அந்த வசதி பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மெசஜ்க்கு ரியாக்ஷன் செய்ய வேண்டுமோ அந்த மெசேஜில் இருந்து கொண்டு கீழிருந்து மேலாக ஸ்வைப் ( Swipe ) செய்தால் எட்டு விதமான எமோஜி வரும்.
Smiling Face with Heart-Eyes, Face with Tears of Joy, Face with Open Mouth, Crying Face, Folded Hands, Clapping Hands, Party Popper, and Hundred Points.
இந்த எட்டில் எது வேண்டுமோ அதை உபயோகம் செய்யலாம். உங்கள் ஸ்டேட்டஸ்கு யாரவது ரியாக்ஷன் தந்தால் அது உங்களுக்கு தனி மெசேஜாக வரும் என்று சொல்லி உள்ளார்கள்.
வழக்கம் போல் , இந்த வசதி இன்னும் அனைத்து பீட்டா செயலி உபயோகிப்பாளர்களுக்கும் வரவில்லை. எனவே நீங்கள் வாட்ஸ் அப் பீட்டா செயலி உபயோகித்து இந்த வசதி வரவில்லை எனில் சில நாட்கள் காத்திருக்கவும்.
நான் வாட்ஸாப்பில் யாருடைய ஸ்டேட்டஸ் பக்கமும் சென்றதே இல்லை, செல்வதே இல்லை! நானும் வைத்துக் கொண்டதில்லை!