அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். 553 மில்லியன் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் அலைபேசி எண் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஹேக்கர்களுக்கான தளத்தில் இலவசமாக பதிவிடப்பட்டுள்ளது. இது பேஸ்புக் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய டேட்டா திருட்டாகும். எப்படி இந்த டேட்டா எடுக்கப்பட்டது என இன்னும் தெரியவில்லை. திருடப்பட்ட இந்த Facebook user data வை கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்ய இயலும்.
திருடப்பட்ட தகவல்களில் பெயர்,அலைபேசி எண் ,ஈமெயில், உங்கள் லொகேஷன் போன்றவையும் அடங்கும். மொத்தம் 106 நாடுகளை சேர்ந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. 32 மில்லியன் அமெரிக்க பயனாளர்கள் ,11 மில்லியன் யு கே பயனாளர்கள் மற்றும் 6 மில்லியன் இந்திய பயனாளர்களின் தகவல்கள் இதில் அடக்கம்.
பிஸ்னஸ் இன்சைடர் என்ற பத்திரிக்கையை சேர்ந்தவர்கள் திருடப்பட்ட Facebook user data வை பார்த்துள்ளனர். அதை அவர்களுக்கு தெரிந்தவர்களின் நம்பர்களை கொண்டு உண்மையான டேட்டா என்று உறுதி செய்துள்ளனர். பேஸ்புக் செய்தி தொடர்பாளர் , இது இரண்டு வருடத்திற்கு முன்பு பேஸ்புக்கில் இருந்த ஒரு பிழையின் மூலம் திருடப்பட்ட தகவல் எனவும் இந்த டேட்டா அழிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.
ஆனாலும் உங்கள் தகவல்களும் திருடப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்