மொபைலில் மால்வேர் எப்பொழுது எந்தவிதத்தில் தாக்கும் என்று கண்டுபிடிப்பது மிக கடினம். முக்கால்வாசி நேரம் மோசமான செயலிகள் அல்லது கோப்புகளை உபயோகப்படுத்துவதினால் இந்தப் பிரச்சனை வந்தாலும் சில நேரம் நாம் நம்பும் செயலிகள் கூட மால்வேர் பிரச்சனை வரலாம்.
மேலே இருக்கும் படத்தில் இருப்பது பார் கோட் ஸ்கேனர் செயலி. மிக அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட செயலியும் கூட. டிசம்பர் மாதம் இந்த செயலியில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டது. அதை சாதாரணமான அப்டேட் என நினைத்து பலரும் அப்டேட் செய்தனர். கூடவே மொபைலில் மால்வேரும் சேர்ந்து நுழைந்தது. கிட்டத்தட்ட 10 மில்லியன் உபயோகிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர் . இதனால் ஏற்பட்ட பாதிப்பை கீழே உள்ள வீடியோவில் காணலாம். malwarebytes நிறுவனம் இதை கண்டுபிடித்தது. இந்த செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.