வாட்ஸ் அப் உலகம் முழுவதும் பலரும் மிகவும் விரும்பி உபயோகிக்கும் செயலி. வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், சிலருக்கு மேலும் சில வசதிகள் / ஆப்ஷன்கள் தேவைப் படுகின்றன. பலருக்கும் உபயோகம் ஆகும் பல ஆப்ஷன்களை வாட்ஸ் அப் பல சோதனைகளுக்குப் பிறகு கொண்டுவருகிறது. ஆனாலும், சிலருக்கு அது போதாமல் வாட்ஸ் அப் செயலியின் மாறுபட்ட செயலிகளை டவுன் லோட் செய்து உபயோகம் செய்கின்றனர். பிரச்சனை என்னவென்றால் , ஆரம்பத்தில் நல்ல செயலிகளாய் இருக்கும் இவை போக போக உபயோகிப்பாளர்களுக்கு பிரச்சனை கொடுக்கின்றன. அத்தைகய ஒரு செயலிதான் FMwhatsapp.
இத்தகைய செயலிகளை உருவாக்குபவர்கள் , உபயோகிப்பாளார்கள் விரும்பும் வசதிகளுடன் கூடவே விளம்பரங்களையும் சேர்த்துதான் அளிக்கின்றனர். பிரச்சனை உருவாகுவதே இத்தகையாய் விளம்பரங்களில்தான். இந்த விளம்பரங்களுக்கான கோட் மூலமே மால்வேர் / ட்ரோஜன் போன்றவை ஒளிந்து ஊடுருவுகின்றன. FMwhatsapp செயலியிலும் இதுதான் நடந்துள்ளது. இதைப் பற்றி காஸ்பர்ஸ்கை நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
FMwhatsapp இப்பொழுது இந்த ட்ரோஜனால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த செயலியை இன்ஸ்டால் செய்தால் முதலில் உங்கள் அலைபேசி பற்றிய தகவல்கள் (Device IDs, Subscriber IDs, MAC addresses) அதன் சர்வருக்கு அனுப்பப்படும். அதை பொறுத்து எத்தகைய payload அனுப்பலாம் என தீர்மானித்து அது உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும். இந்த பே லோட் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மொபைல் ஸ்க்ரீனில் முழு நீள விளம்பரங்கள் அல்லது பின்னணியில் ஓடும் விளம்பரங்கள் அல்லது உங்கள் மொபைலில் இருந்து தகவல்களை திருடும் நிரலிகள் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
எப்படி பாதுகாப்பது ?
- கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை இன்ஸ்டால் செய்யவும்
- வேறு எந்த தளத்தில் இருந்தும் எந்த செயலியையும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்
- ஏதாவதொரு பாதுகாப்பு செயலியை மொபைலில் இன்ஸ்டால் செய்து வைக்கவும்.