என்னதான் மொபைல் பாதுகாப்பு நிறுவனங்கள் அதிகரித்து வரும் மொபைல் பித்தலாட்டங்களை பற்றி தினமும் எச்சரித்து வந்தாலும், ஏமாறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை. சிலசமயம்,மொபைல் உபயோகிப்பவர்களை ஏமாற்றுவது மிக எளிதாக இருக்கிறது. மொபைல் / கணிணி பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை இந்த புதிய Whatsapp delivery Scam பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எப்படி ஏமாற்றுகிறார்கள் ?
கடந்த ஒன்றரை வருடங்களாய் கொரானா காரணமாய் நிறைய பேர் ஆன்லைனில்தான் நிறைய பொருட்களை வாங்குகின்றனர். இதை பயன்படுத்திதான் இந்த புதிய Whatsapp delivery Scam வேலை செய்கிறது.
- வாட்ஸ் அப் பில் உங்களுக்கு பார்சல் வந்துள்ளது என்றும், அதை டெலிவரி செய்ய ஒரு சிறிய தொகை நீங்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறி ஒரு லிங்குடன் மெசேஜ் வரும்.
- பலரும் தான் ஆர்டர் செய்தோமா அதற்கு எதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என்று யோசிப்பதில்லை. அந்த லிங்கை க்ளிக் செய்துவிடுகின்றனர். அங்கு சென்று விவரங்களை முழுமையாக ( கார்ட் / நெட் பேங்கிங் etc ) பதிவிடுகின்றனர். அதன் பின் அந்த விவரங்கள் திருடப்படும்.
- இதில் அதிகம் ஏமாற்றப்படுபவர்கள் சீனியர் சிட்டிசன்களே
இந்த மாதிரி மெசேஜ் வந்தால் சில நிமிடங்கள் யோசிக்கவும். வீட்டில் உள்ளோரிடம் கேட்கவும் அவர்கள் ஏதேனும் ஆர்டர் செய்துள்ளனாரா என்று. பொதுவாய் எந்த இணைய வழி விற்பனை செய்யும் நிறுவனமும் இப்படி தனிப்பட்ட முறையில் பணம் செலுத்த சொல்ல மாட்டார்கள். எனவே இபப்டி வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம். உங்களுக்கு தெரியாதவர்களிடம் இருந்து வரும் லிங்க்களை க்ளிக் செய்ய வேண்டாம்.