இந்தமுறையும் சில சின்ன சின்ன மாற்றங்கள் மட்டுமே. ஆனால் இந்த சின்ன மாற்றங்கள் சிலருக்கு வசதியாக இருக்கலாம். நேற்றும் இன்றுமாய் இரண்டு அப்டேட் வந்துள்ளது. முதலாவது ” Call notifications new feature ” அடுத்தது ” Group permissions ” . அதாவது ஒரு வாட்ஸ் அப் க்ரூப் உருவாக்கும் பொழுதே அந்த க்ரூப் பர்மிஷன்களை செட் செய்யும் வசதி.
Call notifications new feature
இப்பொழுது உங்களுக்கு யாரவது வாட்ஸ் அப் கால் செய்து அந்த அழைப்பை நீங்கள் ஏற்கமுடியாத நிலையில் இருந்தால் அழைப்பை துண்டித்து விட்டு , மெசேஜ் அனுப்பும் விண்டோ சென்று அவருக்கு சொல்ல வேண்டி இருக்கும். ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம், நீங்கள் அழைப்பை மறுத்துவிட்டு உடனே மெசேஜ் செய்ய வசதியாக அழைப்பு வரும் பொழுதே பின்னணியில் மெசேஜ் விண்டோ காட்டும். கீழே உள்ள படத்தில் இதைக் காணலாம்.
Group permissions
பொதுவாக ஒரு வாட்ஸ் அப் க்ரூப் துவங்கும் பொழுது அதில் சில பர்மிஷன்களை அமைக்க முடியும். இப்பொழுது க்ரூப் துவங்கிய பின் தான் அதில் பர்மிஷன்களை மாற்ற இயலும். இந்த அப்டேட் மூலம், ஒரு வாட்ஸ் அப் க்ரூப் துவங்கும் பொழுதே யார் யார் குழு பெயரை மாற்ற இயலும் யார் புதிய நபர்களை குழுவில் இணைக்க முடியும் என தீர்மானித்து அதற்கேற்ப பர்மிஷன்களை அமைத்துக் கொள்ள முடியும்.
கீழே அதற்குண்டான ஸ்க்ரீன் ஷாட்கள்
வழக்கம் போல் இந்த இரண்டு வசதிகளும் பீட்டா பதிவு உபயோகம் செய்பவர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. மற்றவர்கள் சிறிது காலம் பொறுத்திருக்கவேண்டும்.