ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -7 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்- 3 எப்போதும் எதிலாவது ஒரு பகுதியை எடுத்து ஹோமம் செய்தால் அது இருக்கும் பாத்திரத்தை தொட்டுக் கொள்ள வேண்டும். நெய் ஹோமமானால் “ஶ்ராத்தம் – 25”
Category: பொது
ஶ்ராத்தம் – 24
ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -6 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.-2 பிதாவுக்கு, தாத்தாவுக்கு, அவரது தந்தைக்கு என 3 பேருக்கு தலா 2 ஹோமங்கள். யன்மே மாதா என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கான ஹோமங்களில் “ஶ்ராத்தம் – 24”
பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி
எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் “பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி”
ஶ்ராத்தம் – 23
ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -5 ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம் நல்லது. இப்பொழுது ஆபஸ்தம்ப கர்த்தாக்கள் செய்ய வேண்டிய ஹோமம் – சிராத்த பிரயோகத்தை பார்க்கலாம். பெரும்பாலான கர்த்தாக்கள் ஔபாசனம் இல்லாமல் தனியே ஹவிஸ் “ஶ்ராத்தம் – 23”
ஶ்ராத்தம் – 22
ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -4 அடுத்து செய்யப்போவது பரிதிகளை வைப்பது. கிழக்கே இருப்பது இருக்கும் பரிதி சூரியன்! இல்லையா? அவர் அந்தப் பக்கத்திலிருந்து ராக்ஷஸர்கள் வராமல் காப்பாற்றுகிறார். அதே போல மீதி மூன்று “ஶ்ராத்தம் – 22”
ஶ்ராத்தம் – 21
ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -3 அடுத்ததாக ஆஜ்ய சம்ஸ்காரம். அதாவது நெய்யை சுத்திகரித்து ஹோமத்துக்கு தயார் செய்தல். அக்னிக்கு மேற்கே போட்டிருக்கிற 8 தர்ப்பங்கள் மீது நெய் பாத்திரத்தை வைத்து அதில் அந்த “ஶ்ராத்தம் – 21”
மனிதர்கள் – 1
மனிதர்கள் – அறிமுகம் நாம் வாழ்வில் தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் அனைவரையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சில மனிதர்கள் மட்டும் பல காலம் “மனிதர்கள் – 1”
ஶ்ராத்தம் – 20
அடுத்து இரண்டு தர்பைகளால் செய்த பவித்ரத்தை கையில் வைத்துக் கொண்டு, இந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் தொட்டு ப்ரோக்ஷண பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தனக்கும் அக்னிக்கும் நடுவே எட்டு தர்பங்களை வடக்கு நுனியாக போட்டு, அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும். இதில் சிறிது அட்சதையும் நீரும் சேர்க்க வேண்டும். இந்த பவித்திரத்தை வடக்கு நுனியாக பிடித்துக் கொண்டு வலது கையால் மறுமுனையில் பிடித்துக்கொண்டு இதைத் தண்ணீரில் முக்கி, கிழக்கு பக்கமாக மூன்று முறை தள்ள வேண்டும். இது தண்ணீரை சுத்திகரிக்கும் கர்மாவாகும். பிறகு எல்லா பாத்திரங்களையும் நிமிர்த்த வேண்டும். சமித்துகளின் கட்டை அவிழ்க்க வேண்டும். பிறகு இந்தத் தண்ணீரால் எல்லா பாத்திரங்களையும் மூன்று முறை புரோக்ஷணம் செய்ய வேண்டும். பின்னர் இந்த பாத்திரத்தை தெற்கே வைக்க வேண்டும். கூடுதலாக நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
ஶ்ராத்தம் – 19
இங்கே முழு ஹோமமும் ஆபஸ்தம்பிகள் வழியில் சொல்ல இருக்கிறோம். போகிற போக்கில் பொதுவாக ஹோமம் செய்யும் விதம், இங்கே சிராத்தத்தில் எப்படி மாறுகிறது என்பதையும் பார்த்துக் கொண்டு போய்விடலாம்.
ஶ்ராத்தம் – 18
சிலர் மந்திரங்களை மட்டும் சொல்வார்கள். சிலர் சாம்பிராணி தூபம் அல்லது தீபம் கற்பூரம் போன்றவற்றை செய்வார்கள்.