Check site permissions, Dark mode – Chrome for Android Ver 92

This entry is part 2 of 15 in the series Browsers

இன்றைக்கு மொபைல் பிரவுசரில் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது க்ரோம். அனைத்து ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் இன்ஸ்டால் ஆகி வருவதால் அதிகம் பேர் இதையே உபயோகம் செயகின்றனர். சில வருடம் முன்பு வரை பெரிதாக அப்டேட்கள் எதுவும் வராது. ஆனால் இப்பொழுது க்ரோம் ப்ரவுசருக்கு போட்டி அதிகமாகி விட்டது. மைக்ரோசாப்ட் எட்ஜ், பயர் பாக்ஸ் என போட்டி இருப்பதால் அதிகமாக புதிய வசதிகளை கொண்டு வருகிறது. இன்றைக்கு வந்திருக்கும் கூகிள் Chrome for Android Ver 92 புதிதாய் இரண்டு வசதிகளும், ஏற்கனவே பீட்டாவில் வெளியாகியிருந்த வசதி ஒன்று அனைவருக்குமான அப்டேட் ஆகவும் வெளிவந்துள்ளது.

Chrome for Android Ver 92

Dark Mode

இப்பொழுது அனைவருக்கும் இந்த டார்க் மோட் பின் செல்கின்றனர். க்ரோம் ப்ரவுசரும் இந்த டார்க் மோட் வசதியை கொண்டுவந்துள்ளது. இதில் ஒரே ஒரு பிரச்சனை எந்த தளம் ஓபன் செய்தாலும் டார்க் மோடில் வருகிறது. உபயோகிப்பாளர் வேண்டும் பொழுது டார்க் மோட் மாற்றிக் கொள்ளும் வசதி தர வேண்டும். ஆனால் இப்பொழுது டார்க் மோட் வேண்டாம் என்று தேர்வு செய்தாலும் டார்க் மோடில் வருகிறது. இதுகுறித்து பீட்பேக் கொடுத்துள்ளேன்.

Site Permissions

Chrome for Android Ver 92 இல் புதிதாய் வந்திருக்கும் ஒரு வசதி, நீங்கள் செல்லும் ஒவ்வொரு இணையத்தளமும் என்ன என்ன தகவல்களை உங்களிடம் இருந்து பெறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பிரவுசரின் சர்ச் பாரில் இணையத்தள முகவரிக்கு இடது பக்கம் இருக்கும் பூட்டை டச் செய்தால் என்ன என்ன பெர்மிஷன் கொடுக்கப்பட்டிருக்கு என்று தெரியவரும். தேவையில்லையெனில் அந்த பர்மிஷனை நீக்கி விடலாம்.

Follow Sites from Chrome home page

இதைப் பற்றி ஏற்கனவே நான் எழுதி இருந்தேன் . நீங்கள் எந்த ஒரு தளத்திற்கும் சென்று அதை பின்பற்ற விரும்பினால் வலது மேல் மூலையில் புள்ளிகளை ( ஹம்பர்கர் மெனு) தொட்டால் மெனு ஓபன் ஆகும். அதன் இறுதியில் தளத்தின் பெயரும் , பின்பற்ற வேண்டுமா என்றக் கேள்வியும் இருக்கும். அதை டச் செய்தால் அந்த தளத்தில் செய்திகள் புதுப்பிக்கப்படும் பொழுதெல்லாம் க்ரோம் பிரவுசரின் ஹோம் பேஜில் அப்டேட் ஆகும். அதில் இருந்து நீங்கள் படித்துக் கொள்ளலாம்.

இதிலும் சில பிரச்சனைகள் உள்ளன. உதாரணத்திற்க்கு “https://engalblog.blogspot.com/” பிளாகிற்கு சென்று அதை இந்த வழியில் பின்பற்ற முயன்றால் அது “blogger.com” அப்டேட்களை தருகிறது. அந்த பிளாகிற்கு உண்டான அப்டேட்களை தருவதில்லை. இதுகுறித்தும் பீட்பேக் கொடுத்துள்ளேன். அப்டேட் வந்தவுடன் இங்கே பதிகிறேன்.

Series Navigation<< Built-in Screenshot tool – Android ChromeGoogle Chrome Security Settings >>

About Author