இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு காலத்தில் வேறு எந்த ப்ரவுசரும் போட்டியில்லாமல் இருந்தது. பின்பு firefox, chrome போன்ற பிரவுசர்கள் வந்தபின்னரும், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விண்டோஸ் சேர்த்தே அளித்ததால், வேறு வழியின்றி அனைவரும் அதை ஒருமுறையாவது உபயோகிக்க வேண்டி இருந்தது. ஆனால் ” Default Browser ” மாற்றுவது எளிதாக இருந்ததால், அனைவரும் எளிதில் அதை மாற்றிக் கொண்டனர். இதனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 11ல் ஒரு குறுக்குவழியை யோசித்தது. Default Broser செட்டிங் மாற்றுவதை கடினமாக்கியது. முன்பெல்லாம் பிரவுசரை துவங்கும் பொழுது ஒரு கேள்வி கேக்கும் அங்கேயே அதை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 11ல் அதை மாற்றி செட்டிங்ஸ் பேஜில் சென்று ஒவ்வொரு பைல் டைப்பிற்கும் தேர்வு செய்வது போல் அமைத்தனர். பலருக்கும் இதில் பொறுமை இருக்காது என்பது இவர்களுக்கு வசதியாக இருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன் இப்பொழுது ” Choosing default browser “ செட்டிங்ஸ் எளிதாக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்தவுடன் அதில் பொதுவாய் எட்ஜ் பிரவுசர் இருக்கும். அதுதான் default ப்ரவுசராக இருக்கும். அதை நீங்க மாற்ற விரும்பினால்
- ஸ்டார்ட் மெனு ஓபன் செய்து செட்டிங்ஸ் செல்லவும்
- பின்பு இடது பக்கத்தில் “Apps ” என்பதை தேர்வு செய்யவும்.
- இதில் மூன்றாவதாக இருக்கும் ” Default apps ” என்பதை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது உங்களது விருப்பமான பிரவுசரை செலக்ட் செய்யவும்
- மேலே ” Make Google Chrome Your Default Browser ” என்றிருக்கும். அதன் வலது பக்கம் ” set Default ” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
இதை விட மற்றொரு காமெடியான விஷயத்தை செய்து வருகிறது மைக்ரோசாஃப்ட் . எட்ஜ் பிரவுசரில் இருந்து க்ரோம் டவுன்லோட் செய்ய முயன்றால் கீழே உள்ள மெசேஜ் காட்டுகிறது.