Internet Explorer mode in Microsoft Edge

This entry is part 12 of 15 in the series Browsers

விண்டோஸும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரும் இணை பிரியாத ஒன்றாக பல வருடங்கள் இருந்தன. க்ரோம், பயர் பாக்ஸ் போன்ற பல பிரவுசர்கள் வருகைக்கு பின்னால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் முக்கியத்துவமும் உபயோகப்படுத்துவோரும் குறையத் துவங்கினார்கள். ஆனால் அது விண்டோஸுடன் இலவச இணைப்பாய் வந்தது. வேறு வழியில்லாமல் மற்ற ப்ரவுசர்களை டவுன்லோட் செய்ய மட்டும் அதை உபயோகப்படுத்தியவர்கள் அதிகம். இது ஒரு பக்கம் இருக்கட்டும். 2015ல் மைக்ரோசாப்ட் குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் பிரவுசரை அறிமுகப்படுத்தினார்கள். இதன் பின் மெதுவாய் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 11ல் இன்டர்நெட் எஸ்ப்ளோரர் கிடையாது. இது பொதுவாய் யாருக்கும் பெரிய பிரச்சனை இல்லாதது. ஏனென்றால் பெரும்பான்மையான நவீன இணையதளங்கள் எந்த ப்ரவுசரிலும் வேலை செய்யும். ஆனாலும் சிலருக்கு இதனால் பிரச்சனை உண்டு. இந்தியாவில் சில அரசு / வங்கி சார்ந்த அலுவலக தளங்கள் வேறு எந்த ப்ரவுஸரிலும் ஒழுங்காக வேலை செய்யாது. இதனால் அவர்களுக்கு இந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்காக மற்ற பிரவுசரை உபயோகப்படுத்தது முடியாத நிலை வரலாம். ஆனால் எட்ஜ் ப்ரவுஸரியிலேயே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மோட் உள்ளது. அந்த Internet Explorer mode எப்படி உபயோகப்படுத்துவது என பார்ப்போம்.

  1. உங்கள் கணிணியில் எட்ஜ் பிரவுசரை துவக்கி அதில் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும்.
  2. மெனுவில் “Settings” தேர்வு செய்யவும்.
  3. பின் இடது பக்கம் இருக்கும் மெனுவில் “Default Browser” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  4. internet explorer mode pages என்ற ஆப்ஷனின் கீழ் “add pages “ என்று ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
  5. இப்பொழுது எந்த இணையதளத்தை நீங்கள் ஓபன் செய்ய வேண்டுமோ அதன் இணையதள முகவரியை டைப் செய்து சேமிக்கவும்,
  6. இனி எட்ஜ் பிரவுசரில் அடுத்த முப்பது நாளுக்கு இந்த வெப் சைட் செல்லும் பொழுதெல்லாம் அது “Internet Explorer mode” ல் ஓபன் ஆகும்
Series Navigation<< Add passwords manually in Microsoft EdgeShare website across devices in Edge browser >>Edge bar added to Edge Browser >>

About Author

One Reply to “Internet Explorer mode in Microsoft Edge”

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.