Chrome zero-day vulnerability

zero-day vulnerability என்பது செயல்பாட்டில் இருக்கும் செயலி அல்லது மென்பொருளில் அந்த நிறுவனம் கண்டுபிடிக்காத பாதுகாப்புக் குறைப்பாடு. ஹேக்கர்கள் பொதுவாய் இப்படி கண்டுப்பிடிக்கும் குறைப்பாடுகளை டார்க் வெப்பில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிடுவார்கள். இந்தக் குறைபாட்டை வாங்கும் நபர்கள் அதை உபயோகப்படுத்தி , உபயோகிப்பாளர்களின் தகவல்களை திருட இயலும்.

இப்பொழுது அதிகம் பேர் உபயோகிக்கும் க்ரோம் பிரவுசரில் புதிதாய் ஒரு zero-day vulnerability கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Open-source JavaScript engine இந்தப் பிரச்சனை இருப்பதாய் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை சமாளிக்க உங்கள் க்ரோம் பிரவுசரை அப்டேட் செய்யவும்.

பொதுவாய் க்ரோம் பிரவுசர் தானாக அப்டேட் ஆகி விடும். ஆனால் சில சமயங்களில் ஏதாவது சில காரணங்களால் அப்டேட் ஆகாமல் இருக்கலாம். அப்படி அப்டேட் ஆகவில்லையெனில் நீங்கள் அதை அப்டேட் செய்வது நல்லது. பிரவுசரை அப்டேட் செய்ய க்ரோமில் இருந்து Settings > Help > About Google Chrome செல்லவும். உங்கள் பிரவுசரின் பதிப்பு 91.0.4472.164 அல்லது அதற்கு மேம்பட்டதாய் இருத்தல் அவசியம்.

zero-day vulnerability

சில சமயம் அப்டேட் ஆகாமல் பிரச்சனை செய்யும். அதற்கு காரணம் விண்டோஸில் “Google Update Service” என்ற சர்வீஸ் “disable” ஆகி இருக்கலாம். அதை “enable” செய்ய

  1. விண்டோஸ் கீ + R அழுத்தவும். ரன் பாக்ஸ் ஓபன் ஆகும்
  2. பின் அதில் “services.msc” என்று டைப் செய்யவும்.
  3. இப்பொழுது விண்டோஸ் சர்வீஸ் பாக்ஸ் ஓபன் ஆகும்.
  4. அதில் “Google Update Service ” சென்று ரைட் க்ளிக் செய்து “start” என்பதை தேர்வு செய்யவும். ( Do only if it is Stopped )
  5. இப்பொழுது க்ரோம் பிரவுசர் சென்று அப்டேட் செய்யவும். அப்டேட் ஆகிவிடும்
zero-day vulnerability

About Author