வாட்ஸ் அப் செயலியில் இதுவரையில் நீங்கள் வால்பேப்பர் செட் செய்தால் அனைத்து சாட்களுக்கும் அதே வால்பேப்பர்தான் இருக்கும். ஒவ்வொரு சாட் விண்டோவிற்கும் ஒவ்வொரு வால்பேப்பர் வைத்து கொள்ளும் வசதியை இப்பொழுது வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.
எப்படி இந்த வசதியை பெறுவது ?
முதலில் நீங்கள் சமீபத்திய அப்டேட்டை வைத்துள்ளீர்களா என சரிபார்த்துக்கொள்ளவும். ப்ளே ஸ்டோரில் அப்டேட் இருந்தால் அப்டேட் செய்து கொள்ளவும். பின்பு கீழே கூறியுள்ளபடி செய்யவும்.
- எந்த சாட் விண்டோவில் வால் பேப்பர் மாற்றவேண்டுமோ அதை ஓபன் செய்துகொள்ளவும்.
- வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்.
- அதில் “Wallpaper ” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- பின் வெறும் கலர் அல்லது வாட்ஸ் அப் செயலியே தரும் போட்டோக்கள் வேண்டுமா இல்லை உங்களுக்கு விருப்பமான போட்டோ வேண்டுமா எனத் தேர்வு செய்துகொள்ளவும்
- அதன் பின் “set Wallpaper “ தேர்வு செய்யவும்
- அதன் பின் போட்டோ அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்
எந்த எந்த சாட் விண்டோவிற்கு தேவையோ அதில் இவ்வாறு மாற்றிக் கொள்ளலாம்.