Edit message

Edit message – Whatsapp

டெலிகிராம் போன்ற பிற செயலிகளில் வெகு நாட்களாக இருந்து வரும் ” Edit message “ வசதியை இப்பொழுது வாட்ஸ் அப் செயலி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் ப்ளாகில் வெளியாகி உள்ளது. இந்த வசதி பலருக்கும் உபயோகமாக இருக்கும். நீங்கள் தவறாக எழுத்துப் பிழைகளுடன் அனுப்பி விட்டால் அதை திருத்திக் கொள்ளலாம் அல்லது அனுப்பிய தகவலில் மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.

நீங்கள் மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் அந்த மெஸேஜை எடிட் செய்து கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் எடிட் செய்ய இயலாது. தனிப்பட்ட அரட்டை அல்லது க்ரூப் இரண்டிலுமே நீங்கள் அனுப்பிய மெஸேஜை எடிட் செய்து கொள்ள இயலும்.

How to Edit Message

  1. எந்த மெசேஜை எடிட் செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளவும்
  2. இப்பொழுது மேலே வலது புறம் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்
  3. அதில் ” Edit ” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  4. இப்பொழுது கீழே உங்கள் மெசேஜ் எடிட் செய்ய இயலும்
  5. எடிட் செய்த பிறகு ” Edited ” என்ற லேபிளுடன் அந்த மெசேஜ் இருக்கும்
Edit Message

About Author