ட்விட்டர் உருவாகிய நாளில் இருந்து பெரும்பாலோனோர் கேட்டுக்கொண்டிருந்த ஒரு விஷயம் நாம் ட்வீட் செய்த டீவீட்டை எடிட் செய்யும் வசதி. ஏதாவது எழுத்துப் பிழையோ வேறு தவறுகளோ இருந்தால் மீண்டும் தனியாக ஒரு ட்வீட் செய்வதை தவிர்த்து அதே ட்வீட்டை சரி செய்யும் வசதி வேண்டும். ரொம்ப நாளாக இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிறுவனம் இப்பொழுது “Edit the tweets” வசதியைக் கொண்டுவந்துள்ளது. இது பலருக்கும் வசதியாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது. இது குறித்த அறிவிப்பும் ஒரு ட்வீட்டும் நேற்று வந்தது.
Edit the tweets
மேலே இருப்பது ட்விட்டர் ப்ளாகில் அவர்கள் வெளியிட்டிருந்த படம். அவர்கள் குறிப்பின் படி
- ட்வீட் போட்ட நேரத்தில் இருந்து அரை மணி நேரத்திற்குள் அந்த ட்வீட்டை எடிட் செய்ய இயலும்.
- அதே போல் எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதற்கும் கட்டுப்பாடு உண்டு ( எத்தனை முறை என்பது குறிப்பிடப்படவில்லை)
- எடிட் செய்யப்பட டிவீட்களில் ” Last edited ” என்ற குறிப்பு இருக்கும். அதே போல் எடிட் செய்யப்பட்டதற்கு முந்தைய ட்வீட் என்ன என்பதும் பார்க்க இயலும்.
உடனே சென்று எடிட் பட்டன் காணவில்லை எனத் தேட வேண்டாம்.
- இது இப்பொழுது சோதனையில் உள்ளது
- இந்த வசதி குறிப்பிட்ட நாட்டில் ” ட்விட்டர் ப்ளூ ” என்கின்ற Paid Twitter சேவை உபயோகப்படுத்துபவர்களுக்கு மட்டுமே முதலில் வர உள்ளது
- பின்பு உலகம் முழுதும் ட்விட்டர் ப்ளூ சேவை பயன்படுத்துவர்களுக்கு வரும்.
- அதன் பின் கடைசியாக அனைத்து உபயோகிப்பாளர்களுக்கும் வரும்.